பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் வைப்பு முறைபற்றி ஒரு குறிப்பு டாக்டர் இராம. பெரியகருப்பன் மதுரைப் பல்கலைக் கழகம் அறம், பொருள், இன்பம் என்ற பால்வைப்பே பெரிதும் பின்பற்றப்படுவதாகும். இன்பம், பொருள், அறம் என இப் பால் வைப்பு அமைவதும் பொருந்துவதே எனச் சிலர் கருதுவர். திருவள்ளுவ மாலையில் 'இன்பம் பொருள் அறம் வீடென்னும் இந்நான் கும், முன்பறியச் சொன்ன முதுமொழி நூல் (33) என்றும் காணப்படுகிறது. நூற்று முப்பது அதிகாரவைப்பும் பெரிதும் பரிமேலழகர் கொண்ட முறைப்படியே, அவர்க்கு முன்பும் பின்பும் வழக்கா ருக இருந்ததென எண்ண இடமுளது. (அ) அறத்துப்பால் - பாயிரவியல் 4, இல்லறவியல் 20, துறவறவியல் 13, ஊழியல் 1. - இவ்வாறு நான்கு இயல்களாகப் பகுக்கப் பெற்றுள்ளது. இதில் கருத்து வேறுபாடுகள் பெரிதும் இடம்பெற்றில. (ஆ) பொருட்பால் - அரசியல் 25, அங்கவியல் 32, ஒழிபியல் 13. இவ்வாறு முப்பிரிவாக்கிக் கொண்ட பரிமேலழகர் அங்க வியல் என்பதனை அமைச்சு, நாடு, அரண், பொருள் செயல் வகை (கூழ்), படை, நட்பு என ஆறு பகுப்பாகவும் எடுத் தோதி யுளளாா. 365

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/373&oldid=743516" இலிருந்து மீள்விக்கப்பட்டது