பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கீர்த்தனத்தின் திரண்ட பொருள் யாது ? உடல் பிணமாக வீழ்தலாகாது; இடுகாட்டில் உய்க்கும் நிஜலயோ, சுடுகாட்டில் எரிக்கும் நிலையோ நேர்தல் ஆகாது; உற்ருரும் உறவினரும் கூடி அழுகின்ற நிலே வேண்டாமென் கிறார். தாண்டவர் வேண்டுவது, தனது உடலோடு கனக சபையில் கலக்க வேண்டுமென்பதாகும். "கூ, கா, எனக் கிளைஞர் கூடி அழா வகை தான் ஆட்கொளப் பெறல் வேண்டும் என்று அருணகிரியாரும் வேண்டுகிருர். மேலும் சிறப்பான குறிப்பு ஒன்றை முத்தாண்டவர் தருகிருர், 'கற்பூர தீபம்போல்’ தான் கலக்கவேண்டும் என் கிறார். இவ்வுவமை நமக்கு அவர் வேண்டுகின்ற பேற்றினை நன்கு விளக்குகிறது. கற்பூரம் எரிந்த பிறகு எஞ்சுவது ஏதும் இலது. அதுபோல இறையோடு கலந்துவிட்டபிறகு இங்கு எஞ்சுதல் ஏதும் இரு த் தல் ஆகாது என்பதாகும். உடலோடு கலந்துவிட விரும்பும் தாண்டவர் தமது கருத்தை விளக்கும் வகையில் கற்பூர் தீப உவமையை எடுத்தாள்கிறார். தாயுமான வரும், கற்பூர தீபம் போல் மின்னும்படிக்கு அகண்டாகார அன்னபால் தன்ன ஒப்புவித்தல் வேண்டும் என்று இறைஞ்சுவது ஈண்டு நினைவு கூரத் தக்கது. முத்துத்தாண்டவர் தமது கீர்த்தனத்தின் தொடக் கத்தில் மாணிக்கவாசகர் பேறு’ என்று குறித்தலால், திருவாசகத்துள் இப்பேற்றினை விளக்கும் பகுதிகளே ஈண்டு நோக்குவோம். மணிவாசகர் திருவண்டப் பகுதியில் - 'அழிதரும் ஆக்கை யொழியச் செய்த, ஒண் பொருள் இன்றெனக் கெளி வந்திருந்தனன் போற்றி அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி அழிதரும் ஆக்கை ஒழிந்தது: அளிதரும் ஆக்கை வாய்த்தது. என் கிறார். மேலும் அள்ளுருக்கை அமைத்ததையும் குறிப்பிடு கிருர். புன்புலால் யாக்கை புரை புரை கனியப் பெற்ற பெற்றியையும் விளக்குகிருர். மாண்டுழலாவகை தாம் ஆட் கொள்ளப் பெற்றதையும் குறிக்கின் ருர் . 453

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/460&oldid=743613" இலிருந்து மீள்விக்கப்பட்டது