பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீர்கேடுகள். ஒன்றிய பாலுணர்ச்சி ஒன்ரு த பாலுணர்ச்சி என்று இரு வேறுபட்ட உணர்ச் களில் ஒன்றிய பாலுணர்ச் சியே உயர்ந்த நிலையிற்று என்பதில் ஐயமில்லே. ஒன்றிய பாலுணர்ச்சி ஆண் பெண் இருவரிடையே தோன்று கையில் காதல் முகிழ்க்கிறது. இவ்வாண் பெண் இருவரும் பாலுணர்ச்சிக்குரிய தோற்றுவா யான குமரப் பருவத்தினர் . இருவருக்கிடையே பருவம், யாண்டு கல்வி ஆகியவை முறையாக அமைந்திருக்கையில் தான் ஒன்றிய பாலுணர்ச்சி. உயர்ந்த பாலுணர்ச்சி தோன்றுகிறது. ஆண் சில கூறுகளில் மிக்கிருப்பினும் உயர்ந்த பாலுணர்ச்சிக்கு இழுக் 'கேதும் ஏற்படாது. இதனேயே தொல் காப்பியர், - "ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பா லது ஆணே யின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோளுயினுங் கடிவரை இன்றே -களவியல் 2. என் ருர். ஆதலின் உயர்ந்த-செம்மையான பாலுணர்ச்சியின் அடிப்படையில் அமைவதே காதல் என்றும் அகம் என்றும் கூறலாம். அக விலக்கியம் உள்ளக் காதலோரின் பல்வேறு தூய பால் நிலைகளைப் பாட்டுப்படுத்தும் என்பர் ஈண்டுக் கிழவன் கிழத்தி என்ற சொற்கள் சிந்திக்கத் தகுந்தவை. உரியவன்-உரியவள் என்ற பொருளேத் தருகின்ற இச் சொற்களே எண்ணின், பாலுணர்ச்சியில்ை அவளுக்கு இவன் உரியவன்இவனுக்கு அவள் உரியவள் என்றும் கூறலாம். மேலும் இவ் வரிமை உள் ளத்து உரிமையர்கும்.-உள்ள த்து உணர்ச்சியாகும் -உள்ளத்துப் புணர்ச்சியாகும். இவ்வுள்ளப்புணர்ச்சி உடற் புணர்ச்சிக்கு முன்னர் நிகழ்வது. உள்ளத்தால் புணர்ந்தோர் உடலாற்புணர்தல் இயற்கையின் நிய தியே யாகும். அந்நிய தியைத் தொல்காப்பியர் இந் நூற்பாவில் குறிப்பாகக் கூறி மற்ருெரு நூற்பாவில் சிறிது வெளிப்படையாகக் கூறுவர். நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டி உரைக்கும் குறிப்புரை யாகும். -களவியல்-5 - டாக் டர் வ. சுப. மாணிக்கம் தமிழ்க் காதல் பக். 29. 478

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/485&oldid=743640" இலிருந்து மீள்விக்கப்பட்டது