பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுமேரியன், உக்ரோ-பின்னிஸ், திராவிட மொழி குடும்பங்கள் அனைத்தும் ஒட்டு நிலே மொழிக் குடும்பங்களாகும். எனவே தான் டாக்டர் சதாசிவம் போன்ருேர் திராவிட மொழிக்கும் சுமேரிய னுக்குமுள்ள உறவை பலப்படுத்துவதில் முனைத்துள்ளார்கள்." இம்முயற்சியைப் பாராட்டலாமேயன்றி கொள்கையை எற்றுக் கொள்வதற்கில்லே . எனவேதான் தோடர்களிடையேயுள்ள சில தெய்வங்களது பெயரும் சுமேரிய தெய்வங்களது பெயரும் ஒத்துள்ளதால், தோடர்கள் மேசபடோமியாவினின்றும் வந்தவர்கள் என்ற கொள்கையை வற்புறுத்து கின்றனர். எனவே, சுமேரியாவுக்கும் திராவிட மொழிக்கும் ஒலியியல் ஒற்றுமை இவண் காட்டப்பட்டுள்ளது. எனவே, மொழிக்கும் இனத்திற்கும் தொடர்பே இல்லை எனலாம். பேராசிரியர் எமனுே (Emeneau) அவர்கள் சுமேரிய தெய்வ மான நின் லில்' க்குச் சமமான தோடா சொல் பொருத்தமாகத் தோன்றவில்லை என்கிருர். இச் சடங்குக்குரிய சொல் நெல்சன்" என்ற சொல்லோடு தொடர்புடையதாகும். நெல்ன் - தோடா நிலம் - தமிழ், மலேயாளம் நெல்ம் - கோத்தா நெல - கன்னடம், குடகு, துளு மேலும் இஸ்தர்’ என்ற சுமேரிய தெய்வத்தின் பெயர் தொஸ்தஸ் என்ற கால் வழியின் பெயராக இருக்க வேண்டும் . பீட்டரவர்கள் என் தெய்வத் தினேயும் அன் தெய்வத்தையும் ஒப்பிட்டுள்ளார்கள், ‘என் தேவ்' என்ற சொல் தோடா மொழியில் உள்ளது. இனேட்' டிலிருந்து பிறந்தது என்’ ஆகும். இன் - தோடா பினம் - தமிழ், மலேயாளம் பெண்ம் - கோத்தா 8. Sathasivam A. Affinities between Dravidian and Sumerian, Seminar Paper on Dravidian, Linguistics II. Annamalai University 52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/60&oldid=743678" இலிருந்து மீள்விக்கப்பட்டது