பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழைத்துப்பாடி அந்நெல்லின எண்ணிப்பார்த்து நிமித்தம் அறிந்து கூறக்கேட்கும் வழக்கம் இருந்தமை அறிகிருேம். திருக்கோவையார் என்னும் நூலின் கண் மாணிக்க வாசகர் வரைபொருட் பிரிதல் என்னும் பகுதியில் கட்டு வைப்பித்தல் ? (283) கட்டுவித்தி கூறல்” (285) என்னும் இரு துறைகள் அமைத்துள்ளார். கட்டுவித்தி கூறல்” என்னும் துறைக்கு நூலின் உரை யாசிரியர் தே ழி கலக்க முற்று நிற்ப, இருவரையும் நன் மை யாக கூட்டுவித்த தெய்வம் புறத்தார்க்கு இவ்வொழுக்கம் புலப் படாமல் தானிட்ட நெல்லின் கண் முருகனங்கு காட்ட, இதனை யெல்லீருங் காண்மின், இவளுக்கு முருகனங்கொழிய பிறி தொன்றுமில்லேயெனக் கட்டு வித்தி நெற்குறி காட்டிக் கூரு நிற்றல் என விளக்கம் தந்துள்ளார். எனவே திருக்கோவை யாரில் மாணிக்கவாசகர் தரும் இருதுறைகளாலும், அவற்றின் இலக்கியச் செய்யுட்களாலும், கொளுக்களாலும், விளக்கவுரையாலும் தலைவியின் மெலிவை கட்டுவித்திக்கு உறைத்துக் கட்டுக் காணும் வழக்கமும், கட்டுவித்தி நெற்குறியால் முருகன் வடிவு கண்டு கூறும் வழக்க மும், அவர்காலத்தில் நிலேபெற்றிருந்தமை புலப்படுகின்றது. நலாயிரத்திவ்யப்பிரபந்தத்தில் சிறிய தி ரு ம ட லி லு ம் திருவாய் மொழியிலும் கட்டுவிச்சி கட்டுப்பார்த்துக் குறி கூறும் செய்தி கூறப்பட்டுள்ளது (20, 21, 22, 4, 6, 3). 68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/76&oldid=743695" இலிருந்து மீள்விக்கப்பட்டது