பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூதப்பாண்டியன் தன் மனைவியைப் பிரிதல், முறைதவறி கொடுங்கோல்செய்தல், தென் புலங்காக்கும் பாண்டியர் குடியில் பிறக் காதிருத்தல் ஆகிய மூன்றும் வாழ்க்கையில் நிகழக் கூடாத நிகழ்ச்சிகளாகக் கருதுகிருன் என்பதை அறிகிருேம். தான் தன்னை எதிர்த்து வந்த பகையரசரை வெற்றி கொள்ளாதொழிந் தால், இந் நிகழ்ச்சிகள் நிகழ்ந்தாலொத்த இழிவினை அடை வேகுகுக என்று பாடுகிருன். o ' நகுதக் கனரே நாடு மீக் கூறுநர் ’’ என்று தொடங்கும் தலேயாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் பாடலிலும் இத்தகைய ஒரு வஞ்சினத்தையே காண் கிருேம். சோழன் நளங்கிள்ளி பாடிய வஞ்சினப் பாடலில், பகைவன் வருந்தும்படியாகப்போர் செய்யாதொழிந்தேன் ஆயின் காதல் கொள்ளாத பொதுப்பெண்டிரது பொருந்தாத புணர்ச்சியில் என்மாலே துவள்வதாக என்று கூறுகிருன். பொருட்பெண்டி ரை நாடுதல் இழிந்த நிலை என்று கருதுகிருன் என்பதை அறிகிருேம். பெருங்காஞ்சி பெருங்காஞ்சி என்னும் துறை யை மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமை என்று தொல்காப்பியர் குறிப்பிடுவர். புறப்பொருள் வெண்பாமாலையார் பெருங்காஞ்சி என்பதற்கு 'தங்கு திறல் மறவர் தத்தம் ஆற்றல் வீங்கு பெரும் படையின் வெளிப்படுத்தன்று” என்று இலக்கணம் வகுக்கின் றர். பெருங் காஞ்சி என்ற தறையில் புறநானூற்றில் வரும பாடல் கள், தொல்காப்பியத்திற்க் கட்டப்படும் துறைக் குத் தான் பொருத்தமாக அமைந்துள்ளன. புறம் 357-ல் புலவர் பிரம்மனர் என்பவர் இவ்வுலகத்தை ஒரு குடைக்கீழ் ஆண்ட வேந்தர்களுக்கும் வாழ்நாட்கள் கழிந்தன, அவர் ஈட்டி வைத்த செல்வமும் அவர்தம் செல்லுயிர்க்குத் துணையாய் அமையவில்லே என்பதை 74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/82&oldid=743702" இலிருந்து மீள்விக்கப்பட்டது