பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

இது பற்றி விபுலானந்த அடிகள் தம் யாழ் நூலில், 'எட்டிற்கும் ஏழிற்கும் இவையுரிய” எனக் கல்வெட்டின் ஈற்றிலே காணப்படுகின்ற குறிப்பினை நோக்குமிடத்து ச்சுத்த மூர்ச்சனையாகவும், அந்தரம் கூடிய மூர்ச்சனையாகவும் காகலி அந்தரம் கூடிய மூர்ச்சனேயாகவும் அஆனத்தினே யும் இசைக்கலாம் என்றும், கரஹரப்ரியா சமனத்திற்குள்ள சுத்த நரம்புகள் ஏழினையும் பெற்ற மூர்ச்சனை ஏழு எனக் குறிக்கப் பெற்றது என்றும், அந்தரம் கூடியது எட்டு எனக் குறிக்கப் பெற்றது என்றும், காகலியந்தரம் கூடியது ஒன்பது எனக் குறிக்கப் பெற்றது என்றும் எழுதுவர்.

குடுமியாமலே இசைக்கல்வெட்டுக்கு வடபாரிசத்தில், வலம்புரிகணேசருடைய உச்சியில் ஒரு சிறு கல்வெட்டுள்ளது. அது பரிவாதினி என்ற எழுத்துக்களால் ஆயது. வின, வல்லகீ, விபஞ்சி என்பன மூன்றும் வீஜண க்குரிய பெயர்கள் என்றும், ஏழு நரம்புகளை உடையது பரீவாதினி எனப்படும் என்றும் அமரகோசத்தில் கூறப்படுகிறது. ஒரு பெண் தன் தோழியை அனைத்துக் கொண்டு படுப்பது போல, நங்கை ஒருத்தி பரீவா தினியை அணைத்துக் கொண்டு உறங்கிளுள் என்று அசுவ கோஷர் என்பார் தம் புத்த சரித்திரத்தில் கூறி யிருக்கிருர்; அன்றியும் இவ்வீணே பொன்நரம்புகளை உடையது என்றும் கூறுகிருர். எனவே பரிவாதினி என்ற வீஜணயைத் தான் மகேந்திரவர்மன் பயன்படுத்தினன் போலும்.

குடுமியாமலே இசைக் கல்வெட்டில் கூறியுள்ள ஏழு தொகுதிகளும் ஏழு இராகங்களைக் குறிக்கும் என்று பந்தர்க்கர் கூறுவர்.

குடுமியாமலே இசைக் கல்வெட்டில் ராகம் என்ற சொல் யாண்டும் காணப்படாமையாலும்,

மத்யமகிராம, வடிட்ஜகிராம என்று முதலிரண்டும் கூறப் படுதலானும்,