பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

மத்யமக் கிராமம் ஷட்ஜக் கிராமம் என்னுமிவை சுத்த சுவரங்கள் பெற்று வருதலும் - ஷாடவம் பஞ்சமம் எனுமிவை அந்தரத்தொடு கூடி வருதலும் - சாதாரிதா, கைசிகமத்யமம், கைசிகம் எனுமிவை அந்தரம் காகலியொடு கூடி வருதலும், ஆளத்திகளை நோக்குமிடத்துக் காணப்படுகின்றன என்றும் கூறுவர்.

Dr. V. பிரேமா அவர்கள் சாஸ்னத்திற் கண்ட ராகங்கள் ஏழாம் நூற்றண்டில் கண்ட தேவாரப் பண்களோடு தொடர்புடையன; மத்யம கிராமம் ஹரிகாம் போஜி: ஷட்ஜ கிராமம் கரஹரப்ரியா; ஷாடவம் சிகாமரப்பண்; சாதாரித சாதாரிப்பண்; பஞ்சம பஞ்சமப் பண்; கைசிக மத்யமம் பழம் பஞ்சுரப்பண் ஆகலாம்-என்று கூறுவர்.

குடுமியா மலைக்கு அருகிலே திருமயம் என்னும் ஊரில் மலக்கோவிலில் குடபோக வாயிலில் பல்லவர்கால எழுத் தில்ை எழுதப் பெற்ற இசைக்கலச் சாசனம் ஒன்று இருந்தது. பிற்காலத்துப் பாண்டியன் ஒருவன் இச் சாஸ்னத்தை அழித்து அவ்விடத்துத் தன் சாஸனத்தைப் பொறித்தான். இங்கும் அங்குமாகக் காணப்படும் பகுதி களினின்று ஷட்ஜ, காந்தாரம், தைவத என்பனவற்றை அறிதலோடு, பின்வரும் பகுதிகளும் காணப்படுகின்றன:

பரிவாதினிதா

கற்கப் படுவது காண் ஞ் சொல்லிய புகுற் பருக்கும் நிமி முக்கந் நிருபத்துக்கும் உரித்து குண சேனப் பிரமாண ஞ் செய்த வித்யா வித்யா பரிவாதினி கற்.........

திருமயம் சாஸ்னத்தில், பரிவாதினி சொல்லப்பெறுவதால், அழிக்கப் பெற்ற பகுதியிற் கண்ட இசைச் செய்திகள் பரிவாதினிக்கு உரியன என்று ஊகித்து அறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/141&oldid=676676" இலிருந்து மீள்விக்கப்பட்டது