பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/160

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153

சேவை பிற கோயில்களில் நடத்தப் பெறுவதில்லை; இது திருவொற்றியூர்க்கே யுரியது.

இத் திருவிழா பங்குனியுத்தரப் பெருவிழாவில் 33 ஆரும் திருநாளில் ஆயில்ய நகூடித்திாம் கூடிய நாளில் தடை பெற்றது என்று இக் கல்லெழுத்திலிருந்து அறியப்பெறுகிறது. இவ்வாலயத்தில் தற்போது மாசி மாதத்தில் மக நகூடித்திரம் தீர்த்தவாரியாக வைத்துப் பிரமோற்சவம் நடைபெற்று வரு கிறது. இது நீண்ட காலமாக மாசியில்தான் நடந்து வரு கிறது என்று சொல்லுகிருர்கள். அவ்வுற்சவத் தொடர்ச்சி யில் 9 ஆவது நாளில் (அதாவது ஆயில்ய நகூடித்திரத்தில்) மாலே சுமார் 6 மணிக்கு இவ்வற்புதத்தை நடத்திக் காட்டு கிருர்கள். அப்பொழுது எழுந்தருளிக் காட்சி கொடுக்கும் உற்சவமூர்த்தி (நின்ற கோலம்; சுவாமி பக்கத்தில் ரிஷபம், அடுத்து அம்பிகை) தற்போது ஒற்றீசுவரர் 34 கோயிலில் எழுந்தருளியுள்ளார். சபதம் செய்து கொடுக்க எழுந்தருளும் மூர்த்தி கலியாணசுந்தரர் 3 , இவர் ஆலயம் தான் மகிழ மரத்துக்குப் பக்கத்தில் உள்ளது. இவர் நின்ற கோலம்; ஒரு கரம் மேலே துாக்கப்பெற்றுள்ளது. ரிஷபாருடர் வ ந் து மகிழடியில் நின்றதும் கலியாணசுந்தரர் எழுந்தருளி வரு கிருர், தனி விமானம்; மகிழைச் சுற்றிவந்து சபதம் செய்து கொடுப்பதாகப் புராணம் கூறும். அன்று கூட்டம் அதிக மாக மகிழமரத்து மேடையிலும் அதனைச் சுற்றிலும் நின்று கொள்வதால் கல்யாணசுந்தரர் மூ ன் று முறை மு ன் னு ம்

33. திருவொற்றியூரில் பங்குனியுத்திரப் பெ ரு வி ழ நடைப்பெற்று வந்ததை ஒத்தமைந்த் உத்திரநாள் தீர்த்த டிாக ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்ருரே” என்ற அப்பர் திருப்பாடலினுல் அறியலாம்.

34. ஒற்றீசர்-இது கோயிலில் வடமேற்கு மூலையில் உள்ளது. திருவொற்றியூரான் அடிமை என்பவரால் திருப் பணி செய்யப்பெற்றது.

35. சுந்தரமூர்த்தி சுவாமிகள் (உற்சவமூர்த்தி)