பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரசஸ்தி எழுதியவர்

வடமொழிப் பகுதியை எழுதியவன் நாயகன் என்ற பெயரினன்; (தாசயன் என்று கூறுவாரும் உண்டு. செ. 30; S. I. I. Vol. II பக்கம் 514). இவன் வாகூர்க் கல்லூரியில் அலுவலில் இருந்தவனென்றும் எல்லாச் சாத்திரங்களிலும் வல்லவனென்றும் கொள்ளலாம்.

பொது

நிருபதுங்க பல்லவன் காலத்து இவ்வித்யா போகம் தரப்பெற்றமையின் பல்லவநாட்டின் தென்பகுதியில் இவன் காலத்து இக்கல்லூரி சிறப்புற்றிருந்ததால் வேண்டும். இவ்வறக்கொடை பெறுதற்குமுன்பே இக்கல்லூரி சிறந்திருந்தது இவ்வூர்க் கோயிலில் மூன்றாம் கன்னரத்தேவன், முதல் இராசராசன் முதலியோருடைய கல்வெட்டுக்கள் இருந்த போதிலும் அவற்றுள் ஒன்றுதானும் இக்கல்லூரியைக் குறிக்காதது பெரு வியப்பைத்தருகிறது. எனவே பல்லவர் ஆட்சி நீங்கியவுடன் இக்கல்லூரியும் பெருமைகுன்றி, நிலையான அரச ஆதரவு அற்று, நாளாவட்டத்தில் மறைந்தது போலும்!



"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/57&oldid=1388529" இலிருந்து மீள்விக்கப்பட்டது