பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70


தது. இதில் குலோத்துங்கன் அநபாயன் எனப் பெற்றான் சம்பந்தர் "பிரம்ஹ புரீச" என்றும், நாவுக்கரசர் "வாகதிபதி" என்றும், சுந்தரர் "ஸ்வ ஸ்வாமிமித்ர" என்றும் குறிக்கப் பெற்றுள்ளனர். வடமொழிக் கல்வெட்டின் இறுதியில் சுந்தரர், "ஆளுடைய நம்பி" என்று குறிப்பிடப் பெற்றதோடு அவருடைய தாய் இசைஞானியார் என்றும், அவ்வம்மையார் ஞான சிவசாரியார் குலத்தில் உதித்தவர் என்றும் அவருடைய கோத்திரம் சைவ கௌதம கோத்திரம் என்றும், அவதரித்த ஊர் கமலாபுரம் என்றும் சொல்லப்பெற்றுள்ளன. கமலாபுரம் என்பது திருவாரூர். இசைஞானியாரைப்பற்றிய கல்வெட்டுப் பகுதி பின் வருமாறு:-

"ஆளுடைய நம்பி மாதாக்கள் இசைஞானியார்
ஜநநீபவதோ ஞானசிவாசார்ய குலேபவது சைவே

கௌதம கோத்ரேஸ்மிஞ்ஞான்யாக்யா கமலாபுரே"

இக்கல்வெட்டில் "ஆளுடைய நம்பி மாதாக்கள் இசை ஞானியார்" என்றவை மட்டும் தமிழ் எழுத்துக்களிலும் எஞ்சியவை கிரந்த எழுத்துக்களிலும் உள்ளன.

இக்கல்வெட்டில் இசை ஞானியாரைப்பற்றிக் குறிக்கப் பெற்றவை சேக்கிழார் சுவாமிகளால் யாண்டும் குறிப்பிடப் பெறவில்லை.

திருநக்ஷத்திரம்

சித்திரை மாசத்தில் சித்திரை நாளே இவ்வம்மையாரின் திருநாள் ஆகும். அந்நாளில் இசைஞானியாரையும், அவர்தம் கணவனாராகிய சடையனாரையும், மகனாராகிய சுந்தரரையும் போற்றி உய்க.



"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/77&oldid=1388546" இலிருந்து மீள்விக்கப்பட்டது