பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
88



இருநிலம் - பாண்யநாடும் சோழநாடும் மூவகைத் தமிழ் - இயல், இசை, நாடகம் நால்வகை வேதம் - இருக்கு, யசுர், சாமம், அதர்வணம்

ஐவகைவேள்வி - பிரமவேள்வி (வேதமோதுதல்), தேவ வேள்வி (யாகம்செய்தல்)

மானிட வேள்வி (விருந்தோம்பல்), தென்புலத்தார். வேள்வி (தென் புலத்தார் பொருட்டு நீர்க்கடன் முதலியன செய்தல்), பூதவேள்வி (பிராணிகட்குப் பலியுணவு கொடுத்தல்).

அறுவகைச் சமயம்: புறம், அகப்புறம், அகம் எனும் நான்கனுள் தனித்தனி அறுவகைப் பட்ட சமயங்களுள் அகச்சமயம் ஆறு என்னலும் ஆம்.

எழுவகைப்பாடல் - ஏழிசை பொருந்தியபாடல் (ஏழிசை

குரல், துத்தம், கைக்கிளை, உழை , இளி, விளரி, தாரம் என்பன.)

ஒன்றுகொலாம்

பொங்கு கடல் கன்மிதப்பில் போந்தேறிய பெருந்தகை யாளராகிய திருநாவுக்கரசர், திருவையாற்றுக்குச் செல்லும் வழியில் திருநாவுக்கரசர் என்ற திருநாமம் ஒரு தண்ணிர்ப் பந்தர் முழுவதும் எழுதியிருப்பதைக் கண்டார். ஆங்கு அப் பூதி அடிகளாரின் அன்பின் திறத்தை வினவி அறிந்து அப் பூதி அடிகளாரின் அகத்தை அண்மினர். அப்பூதியடிகளும் வந்தவர் திருநாவுக்கரசர் என்பதை உசாவி அறிந்தார். அப்பூதியடிகளின் வேண்டுகோட்கிணங்கித் திருநாவுக்கரசர் அமுதுசெய இசைந்தார். அப்பூதியடிகளாரின் மூத்த மகன் 'வாழைக்குருத்து அரிந்துவரச் சென்ற பொழுது அராத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/95&oldid=980846" இலிருந்து மீள்விக்கப்பட்டது