பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


130 to ஆரணிய காண்ட ஆய்வு

இராமன் இலக்குவனைக் காவலுக்கு விட்டுத் தான்

காலைக் கடன்களை முடிக்க நீர்க்கரைக்குச் சென்றான்.

அப்போது அரக்கி, சீதையை மறைத்து விட்டுத் தான் சீதையின் உருக்கொள்ள எண்ணிச் சீதையைப் பற்றப் போனாள். இதை இலக்குவன் பார்த்து விட்டான்.

உறுப்பு அறுப்பு

இலக்குவன் பாய்ந்து அரக்கியின் கூந்தலை இடக் கையால் பற்றிக் கொண்டு, வாளை எடுத்து அவளுடைய முக்கு, காதுகள், முலைக்கண்கள் ஆகியவற்றை அறுத்து எறிந்து பின் தலைமயிரைப் பிடியினின்றும் விட்டான்.

"கில்லடீஇ எனக் கடுகினன் பெண்ணென கினைந்தான்

வில் எடாது அவள் வயங்கு எரியாம் என விரிந்த சில்வல் ஒதியைச் செங்கையில் திருகுறப் பற்றி ஒல்லை ஈர்த்து உதைத்து ஒளிகிளர் சுற்றுவாள்

உருவி” (93)

'ஊக்கித் தாங்கி விண்படர்வென்

என்று உருத்து எழுவாளை நூக்கி நொய்தினின் வெய்து இழையேல் என நுவலா மூக்கும் காதும்வெம் முரண்

முலைக் கண்களும் முறையால் போக்கிப் போக்கிய சினத்தொடும்

புரிகுழல் விட்டான்' (94)

நில்லடீஇ=இது அளபெடை இதை நீட்டிப் படிக்க வேண்டும். சீதையைப் பற்றப் போனதால் நில்லடீஇ என்றான். அதற்குள் ஏதாவது நடந்துவிடப் போகிறது என்றெண்ணிக் கடுகினன்-விரைந்து ஓடிவந்தான்.