பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுத்தர சண்முகனார் () 213

சிறந்தது. இலக்குவன் எவ்வளவு சொல்லியும் சீதை

கேளாமையால், இராமனது குரல்வந்த இடம் நோக்கிச் சென்றான்.

தவத்தவர் வடிவம்

இலக்குவன் பிரிந்ததும், வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இராவணன், முக்கோலுடன் தவக்கோலம் பூண்டு ஆங்கு வந்தான்.

உணவே இல்லாதமையால் வற்றியது போன்ற மெலிந்த உடலுடனும், நெடுந்தொலைவு நடந்து வந்ததால் உண்டானது போன்ற சோர்வுடனும் காணப்பட்டான்:

'ஊண் இலனாமென உலர்ந்த மேனியன்

சேண் நெறிவந்ததோர் வருத்தச் செய்கையன்” (21) கையும் காலும் நடுங்க, மூப்பு என்னும் பருவமும் வெறுக்கும்படியான முதுமைக் கோலத்துடன் மெல்ல நடந்து வந்தான்.

'காப்பரும் நடுக்குறும் காலன் கையினன்

மூப்புஎனும் பருவமும் முனிய முற்றினான்’ (22) இவனது அளவுமீறிய முதுமைக் கோலத்தைக் கண்டு, மூப்பு என்னும் பருவமும் வெறுக்கிறதாகக் கூறியிருப்பது ஒரு புதுவகைக் கருத்து வெளிப்பாடாகும்.

மற்றும், தாமரை மணியாலான உரு (செப) மாலையும் ஆமை வடிவான மணையும் பூணுரலும் கொண்டு வளைந்த கூன் உடலுடன் அருந்ததி அனைய சீதையிருக்குமிடம் வந்து சேர்ந்தான்.

“தாமரை மணிதொடர் தவத்தின் மாலையன்

ஆமையின் இருக்கையன் வளைந்த ஆக்கையன் நாமநூல் மார்பினன் கணுகி னானரோ தூமனத்து அருந்ததி இருந்த குழல்வாய்” (23)