பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


20 0 ஆரணிய காண்ட ஆய்வு

எண்ணுமாறு, சூலத்தின் துண்டங்கள் விண்மீன்கள் போல் விழுந்தனவாம்.

இது, சிலப்பதிகாரம் - வழக்குரை காதையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவியாகிய கோப்பெருந்தேவி, இறப்பதற்கு முன்னாள் இரவில், ஞாயிற்றை இருள் விழுங்க, இந்திர வில் இரவில் தோன்ற, பகலில் விண்மீன்கள் விழுந்ததாகக் கனவு கண்டதாகத் தோழியிடம் கூறினாளாம்:

"கதிரை இருள் விழுங்கக் காண்பன் காண் எல்லா!

விடுங்கொடி வில் இர, வெம்பகல் வீழும் கடுங்கதிர் மீன் இவை காண்பென்காண் எல்லா"

(5, 6, 7)

எல்லா = தோழியே. வெம்பகல் வீழும் மீன்' என்பது காண்க. தோழியிடம் கூறிய இக்கனவைக் கணவன் பாண்டியனிடமும் பிறகு கூறினாலாம்.

இரவு வில்விடும், பகல் மீன் விழும் இருங்ான்கு திசையும் அதிர்ந்திடும் வருவதோர் துன்பம் உண்டு மன்னர்க்கி யாம் உரைத்தும்' (11, 12) என்பது பாடல் பகுதி. இவ்வாறு கம்பரும் குறிப்பிட் டுள்ளார். -- -

பின்னர் விராதன் மலைகளையும் மராமரத்தையும் இராமன் மேல் எறிந்தான். அவை துகளாக்கப் பட்டன. பின் இராமன் விராதனின் தோளிலும் மார்பிலும் வலிமை மிக்க பன்னிரண்டு அம்புகளை எறிந்தான்.

முள்ளம் பன்றி, அம்புபோல் நீட்டிக் கொள்ளும் தன் முள் போன்ற மயிர், பகை விலங்குகளின் மேல் சென்று