பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/264

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


262 0 ஆரணிய காண்ட ஆய்வு

தொடா முலை

மேலும் கூறலானாள்: அழகிய வீரனே! இதுவரையும் யாரும் தொடாத என் முலைகளோடு உன் மார்பை இணைத்துத் தழுவி எனது உயிரை விரைவில் மீட்டுத் தருக:

'பின்னும் உரைப்பவள் பேரெழில் வீரா

முன்னம் ஒருத்தர் தொடா முலையோடு உன் பொன்னின் மணித்தட மார்பு புணர்ந்து என் இன்னுயிரைக் கடிது ஈகுதி என்றாள்' (53) தொடா முலை என்பதனால், நான் கன்னிமையோடு இருக்கிறேன் என்பதாகக் கூறுகிறாள். நீ அருள் செயா விடின் என் உயிர்போய் விடும் - அதனால், கடிது (விரைந்து) ஈகுதி (உயிரைக் காப்பாற்றிக் கொடு) என்கிறாள்.

பெண்ணின் கன்னிமையை அறிவிக்க ஒருத்தர் தொடா முலை' என்று அயோமுகி சொன்னதாகக் கம்பர் கூறியுள்ளார். சிவப்பிரகாச அடிகளார் தம் பிரபுலிங்க லீலை நூலில், அல்லமர் என்னும் அருளாளரின் காமம் தோயாத தூய்மையை அறிவிக்க:

'படா முலை படாத தண் சோதி” (19:53)

என்று குறிப்பிட்டுள்ளார். தண்சோதி = அல்லமர். அவர் சோதி வடிவான வராம் - ஆனால், தண்ணிய - குளிர்ந்த சோதி வடிவினராம், படா முலை படாத' என்பதில் முதலில் உள்ள படா என்பதற்குத் தளராத என்பது பொருள்.

பின், போய் விடு - இல்லையேல் நின் உடல் கூறிடும் என்றான், இலக்குவன்.

அயோமுகி மீண்டும் வற்புறுத்தினாள். நீ போகவில்லை யெனில் உன் காதுகளையும் மூக்கையும் அறுப்பேன் என்றான் (57)