பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் . 63

திசையும் ஏழ் உலகும் எவ்வுயிரும் உய்யக் காவிரி கொண்டு வரப்பட்டதாகப் பாடலில் கூறப்பட்டுள்ளது.

காவிரி தமிழ் நாட்டிற்காகக் கொண்டு வரப்பட்டதாக ஒரு புராண வரலாறு கூறுகிறது:

இந்திரன் அரக்கர்கட்கு அஞ்சித் தமிழ்நாட்டில் உள்ள சீர்காழிக்கு வந்து இறை வழிபாடு செய்து கொண்டிருந் தானாம். வழிபாட்டுக்கு மலர் வேண்டி ஒரு பூந்தோட்டம் அமைத்தானாம். அதற்கு நீர் வசதி வேண்டுமெனப் பிள்ளையாரை வேண்டினானாம். விநாயகர் ஒரு காகமாக உருவெடுத்து, குடகுமலைப் பகுதியில் தவம் செய்து கொண்டிருந்த அகத்தியரின் நீர்க் குண்டிகையைக் கவிழ்த்தாராம். அதில் இருந்த நீர் காவிரியாகப் பெருகிச் சீர்காழிக்கு வந்ததாம். -

காவிரி வந்த வரலாறு பல நூல்களில் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றைக் கம்பனின் கூற்றுக்கு அரணாகக் காண்பாம்:

“சுர குலாதியன் துய்மலர் கந்தனம்

பெருக வார்கடல் பெய்த வயிற்றினோன் கரக நீரைக் கவிழ்த்த மதகரி சரணம் நாளும் தலைக்கு அணி ஆக்குவாம்' இது, சிவப்பிரகாச அடிகளாரின் பிரபுலிங்க லீலைக் காப்புச் செய்யுள். -

“ஆதி மாதவமுனி அகத்தியன்தரு

'பூத நீர்க் கமண்டலம் பொழிந்த காவிரி (2) இது பெரிய புராணம்-நாட்டுச் சிறப்புப் பாடல் பகுதி.

காந்தமன் என்னும் மன்னன் வேண்ட, அகத்தியனது கரகம் கவிழ்க்கப்பட்டதாக மணிமேகலை கூறுகிறது: