பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார். 亡 83

அரசாட்சி கிடக்கட்டும் என்று அதைப் பொருட்படுத்தாது விட்டுவிட்டு, என்னுடைய உண்மையான அன்பை-நட்பை ஆய்ந்தறியவே (சோதிக்கவே) இவ்வாறு இறந்தனை போலும்

என்றுள்ளான் சடாயு.

அதாவது: உண்மையான நண்பர் தம் உண்மையான நண்பர் இறந்துவிடின் தாமும் இறந்துவிடுவர் - அவ்வாறு நாம் (தயாதன்) இறந்ததும் சடாயுவும் இறந்து விண்ணுலகிற்கு வந்து நம்மோடு சேர்கிறானா என்பதை அறியவே இறந்தனையோ என்றுள்ளான்.

நண்பர் இறந்துவிடின், உண்மையான நண்பர்களும் இறந்து விடுவர் என்பதற்கு, கோப்பெருஞ்சோழன் இறந்ததும், அது பொறாது, பிசிராந்தையார் என்ற புலவரும் பொத்தியார் என்ற புலவரும் உடன் இறந்ததைப் புறநானூற்று வரலாறு

சான்று பகரும். - - - -

செஞ்சி தேசிங்கு மன்னனோடு ஆர்க்காடு நவாப் போர் தொடுத்தான். அப்போது தேசிங்கின் நண்பனும் படைத் தலைவனுமாகிய மகமத்கான் என்பவன் வழுதாவூரில் திருமண மேடையில் மணமகனாக அமர்ந்திருந்தான். செஞ்சிப் போரைக் கேள்விப்பட்டு உடனே எழுந்தோடித் தேசிங்கிற்கு வெற்றி தேடித் தந்தான். மகமத்கானை எதிரி ஒருவன் பின்னால் இருந்து படைக்கலம் ஏவிக் கொன்று விட்டான். தனக்காக உயிர் கொடுத்த நண்பன் மகமத்கான் இறந்ததைப் பொறாத மன்னன் தேசிங்கு தானும் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டான்.

இத்தகைய நண்பர்களின் வரலாறுகள் உலகில் வழங்கும் வரையும் நட்பு என்னும் சொல் அகராதியில் இருக்கும். இங்கே,

"கேட்டினும் உண்டுஓர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்” (196)