பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சூர்ப்பனகைப் படலம்

இராவணன் தங்கையாகிய சூர்ப்பணகை என்னும் அரக்கி தொடர்பான படலம் இது. சூர்ப்பம் என்றால் முறம். முறம் போன்ற நகம் உடையவளாதலின் இவளுக்கு இப்பெயர் ஏற்பட்டது.

கோதாவரி காணல்

பஞ்சவடி நோக்கிச் சீதையோடு சென்ற இராம இலக்குமணர் கோதாவரி ஆற்றைக் கண்டனராம். - கோதாவரி ஆற்றை இரு பொருள் (சிலேடை) நயம் பெறக் கம்பர் புனைந்துள்ளார்:

"புவியினுக்கு அணியாய் ஆன்ற

பொருள் தந்து புலத்திற் றாகி அவி.அகத் துறைகள் தாங்கி

ஐந்திணை நெறி அளாவிச் சவிஉறத் தெளிந்து தண்என்று

ஒழுக்கமும் தமுவிச் சான்றோர் கவி எனக் கிடந்த கோதா

வரியினை வீரர் கண்டார்” (1)

இந்தப் பாடலில் ஆறு கவியோடு ஒப்பிட்டுக் கூறப் பட்டுள்ளது. ஆற்றுக்கும் கவிக்கும் உள்ள ஒற்றுமையைக்

காணபாம;

1. புவியினுக்கு அணி = உலகுக்கு - ஊருக்கு அணியாய் - அழகாய் - அலங்காரமாய் ஆறு உள்ளது. “ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்' என்பது ஒளவையின்