பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரதிநிதித்துவம் தாய்ப் பாஷையில் அவர் குழந்தைகள் கல்வி கற்க வசதிகள், தனிப்பட்ட பள்ளிக்கூடங்கள் இவைபோன்ற கலாபிவிருத் திக்கும் மன வளர்ச்சிக்கும் தேவையான உரிமைகளையே சிறுபான்மையோர்கள் வேண்டுகின்றனர். தனிப்பட்ட அர சியல் சலுகைகளையோ, தங்கள் ஜாதியினருக்கு விசேஷ உத்தியோகங்களையோ, பதவிகளேயோ அவர்கள் விரும்ப வில்லை. ஆதலின், அரசியல் திட்டத்திலேயே அவர்களது வேண்டுகோளின்படிப் பாதுகாப்புகளை அளித்து விட்டால் சிறுபான்மையோர் பிரச்னை தீர்ந்து முடிவு பெறும். - சிறுபான்மை வகுப்பினர்.:--இது இந்தியாவுக்கென்றே ஏற் பட்ட விசேஷ அம்சம். முன்பே சொல்லியபடி சில இந்துக் கள், முகம்மதியர்கள், கிறிஸ்துவர்கள், ஐரோப்பியர்கள், ! ஆங்கிலோ இந்தியர்கள் ஆகியவர்களுக்கு அளித்திருக்கும் தனித்தேர்தல் தொகுதிகளால் தேசமே சின்ன பின்னமாய்ப் பிரிக்கப்பட்டு விடுகிறது. ஒரே தேசத்தினராயிருந்தும், ஜனங்கள் வகுப்புணர்ச்சியினல் பிரிந்து கின்று, தனித் தேர் தல் தொகுதியிலேயே கருத்துக்கொண்டிருக்கிருர்கள்; அத" ல்ை தாங்களும் காட்டு மக்கள் என்பதைக்கூட மறந்துவிடு கின்றனர். எனவே, ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள் கையாகிய சமத்துவத்தையே இம் முறை பாதித்துப் பொதுப்பிரஜை என்ற உணர்ச்சியின் வளர்ச்சிக்குப் பெரிய தடையாக ஏற்பட்டுவிடுகிறது. - - ஒட்டுப் பலத்தில் சிறுபான்மையோர் :-ஒவ்வொரு பிரதி நிதித்துவ முறையிலும் சிறுபான்மையோருக்குத் தேவை. யான பாதுகாப்பு அளிக்கவேண்டுமென்பது ஜனநாயக ஆட் சியின் முக்கிய அம்சங்களில் ஒன்று. பிரிட்டிஷ் அங்கத்தினர். தேர்தல் தொகுதி முறையில் சில ஜனக்கூட்டங்களுக்கு நடைமுறையில் ஒட்டு உரிமையில்லாமலே போய்விடுகிறது. சில சமயங்களில் பிரதிநிதிகள் பெரும்பான்மையோரின் இஷ்ட்மின்றியே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எனவே, இம்முறை சிறுபான்மைக் கூட்டத்தினர்களுக்கும் சிறு பான்மைக் கட்சிகளுக்கும் பெருத்த அநியாயம் விளைவித். திருக்கின்றது. -- -