பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364

உரையாடும்பொழுது, இந்திய மக்களே கொண்டார் என்னுமிடத்தில் உள்ள அரண்மனையைச் கட்டியிருக்க வேண்டும் என்றர். பெருங் கற்பாறைகளைச் செதுக்கி அமைத்த கோயில்கள் மாமல்லபுரத்தில் இருப்பதுபோல, வலிபெல்லா என்னும் இடத்திலும் இருக்கின்றனஎன்றும் குறிப்பிட்டார்.

இன்றை ஈராக் எனும் நாட்டின் நிலப்பரப்பில் எத் துணையோ பழைய நகர்களும் பண்பாட்டுச் சின்னங்களும் புதைந்து கிடக்கின்றன. அசீரியா (Assyria) சுமேரியா (Sumeria) எனும் நாடுகள் இங்குத்தான் இருந் ££r. gg jfit .ig.%υ (Euphrates) @g;®ifi6iv (Tigris) argyú, பேராறுகள் இப் பண்பாடுகளுக்குத் துணைக்காரணமாக இருந்தன. ஏனெனில், இவற்றின் கரையோரங்களில் எழுந்த நிம்ரூட், கமேர், அக்காட் எனும் நகர்களே கிறிஸ் துவுக்கு மூவாயிரம், நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற் பட்ட வரலாற்றை உடையன. இந்நாடுகளே சிந்துநதிப் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையவையாகக் கருதப்படுகின்றன. சிந்துநதியின் பண்பாட்டில் நாம் காணும் சின்னங்களும் எழுத்து முறைகளும் இந்நாடுகளு டன் தொடர்புள்ளவையாகக் கூறப்படுகின்றன. தமிழர் இந்நாட்டுத் தொடர்புடையரெனக் கூறுப. காகத்தையும் தோகையையும் யானைக்கொம்பையும் இந்நாடுகளுக்கு முதல்முதல் திராவிட மக்களே கொண்டுவந்ததாகக் கூறுவாருளர். மேலும் ஊர் என்ற நகரின் பெயர் மாபெருங் கல்தேயருடைய ஊரைக் குறிக்கின்றது. அவ ருடைய பெருங்கடவுளுக்கு "ஆண்" என்ற பெயர் உண்டு. அவர்களின் கோயில்களிலும் தமிழ்கோயில்களில் பணி செய்யப் பெண்களே நியமித்திருந்தது போலக் கோயிற் பணிக்கென்று பெண்களை நியமித்திருந்தனர்.

" ஒன்றே உலகம் பக்.23, 26, 27, 30, 42, 46,73, 208-9, 226-7