உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ககூசு ஆரிபுநாயக வசனம். 7 கற்பிக்க வேண்டுமான இல்மு களுள் எஞ்சியவற்றையும் கற்பித்து, மஅரிபா என்னும் ஞானபாகத்து முறைகளையும் தெரிவித்தார்கள். உலகத்தே சிருஷ்டிக்கப்பட்டுத் தோற் றுவனி அனைத்து அழிபவை; அவையெல்லாம் கயிற் றில் அரவுபோலக் கற்பிதமேயாம் என்றுதெளிந்து மனத் தூய்மை கொண்டு, ஒன்றையும் விரும்பாது அனைத்ை தையும் அறவே வெறுத்துரிற்கும் நிலையாகிய முஸாஹதா வையும், ஊண் உறக்கமாதிச் சுகாநுபவங்களையெல்லாம் ஒடுக்கி, திக்று பிக்று என்கின்ற தியான விசாரம் இரண்டிலும் மன தை ஒருப்படுத்தி, தனியாசமும் மௌனமும் பெற்றுநிற் கும் தெண்டிப்பின் நிலையாகிய முஜாஹதா வையும், வலம் டம் என்னும் இருபக்கத்து நிகழும் எவ்வகைக் கரும மும் தோற்றப்படாதவண்ணம் அகமுகப் பார்வைகளை ம டக்கி, எதிரே அல்லாகுத் தஆலா நம்மைப் பார்த்தபடி.பி ருக்கின்றான்; நாம் அவன்பார்வைசின்றி இருக்கவில்லை; ஆதலால், நம்பார்வையும் அவன்புறத்தேதான் இருத்தல் வேண்டும் என்று கருதி, அவனைப் பார்த்தபடி யிருக்கும் நிலையாகிய முறாகபா வையம், பொறி புலாதிகளான இந்திரி யங்களை யெல்லாம் அழித்துப் பிரபஞ்சத் தோற்றத்தை இல்லாமையாக்கி,அல்லாகுத் தஆலா வின் சமுகத்தில் முக முகமாவிருக்கும் லையாகிய முஹாலற வையும், பல பொ ருட்களாய்த்தோற்றும் எல்லாம் இல்லையென்று அழித்து, என்றும் உள்ள தான பொருள் அல்லரகுத் தஆலா வே என் று தாபித்து, அவனைத் தரிசிக்கும் நிலையாகிய முஷாஹ தா வையும், ஒருபொருள் இருள்மறைவிற் காணப்படும் போது சூரியன் உதித்து வெயிலைவீச அவ்விருள் நீங்கி அப்பொருள் வெயிலொளியில் தெளிவுறக் காணப்படுவது பே ல, காண்போனுக்கும் காணப்படுவோனாகிய அல்லாகுத் தஆலா வுக்கும் இடையிற் கிடந்தமறைப்பு நீங்கித் தெரி கின்ற நிலையாகிய முகாஷ்பா வையும், அகக்கண் முசுக்கண் என்னும் இரண்டு கண்களும் திறந்து, நடுப்பகலில் வெள் ப