உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பன்னீர் மாரி அன்று இறக்கு தேசத்து மேம்பாடுள்ள மனிதர்கள் நாற்பதுபேர் ஒரு குழுவாய்த் திரண்டு நாயகமவர்களின் சபையினிடத்து வந்து தாழ்ந்துநின்று பின் வருமாறு சொல்கின்றார்கள்:- "மனிதர்க்கு நேரிடும் எவ்வகைக் கொடிய துன்பங்க ளையும். ஒரு கிருபாநோக்கத்தரலும், திருவாய்மொழியா லும், பற்றறளிவக்கும் மகிமைவாய்ந்த நாயகமே, இப்போ து தங்கள் மேன்மையுள்ள சமூகத்தில் தமியேங்கள் மு றையிடும் விஷயத்தைக் கருணைகூர்ந்து கேட்டருளல் வேண்டும். எல்லா வளங்களும் பொலிந்த இந்த இறாக்கு, தேசம் இக்காலத்துப் பஞ்சத்தால் மிக வருந்தாநின்றது. உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாக் காரணமான மழை நின்றுபோய், செழிப்பான பயிர்களெல்லாம் உலர்ந்து சுரு கின. அதனால் விளைச்சல் இன்றி மனிதர் மிக வருந்து கின்றனர். இப்பஞ்சம் இருக்கு எங்கும் பரந்து நிற்கின் றது. மனிதர் ஓரிடத்து இருந்து வேறோரிடஞ் செல்லு தற்கு இடம்பாடில்லை. ஆகாயத்தில் கரியமேசம் கையத் தனையும் காண்பது அரிதாய்விட்டது. தெண்ணீர் நிரம் பீப் பக்கமெல்லாம் தண்ணென்றிருந்த ஏரி, குளம், கால் வாய், நதிகளாகிய நீர்நிலை முழுதும் வற்றிவறண்டு, பொ ருள் ஈட்டுதலே தம் கடமையென்று பலவழியும் திரவியந் தேடிக் குவித்துவைத்துத் தருமத்தின் பொருட்டுச் செல வுபண்ணாத லோபிகளின் செல்வம்போவர் போயின. கல் வியறிவு ஒரு சிறிதும் இன்றிக் கற்றாரை யிகழ்ந்து திரியும் முழுமக்கள் ஆக்கம் தீய்வதுபோலப் பூம்பொழில்களெல் லாம் தீய்ந்தன. கொடுங்கோன் மன்னன் தன் குடிகளை இரக்கமின்றி அலைப்பதுபோல மனிதரைப் பஞ்சம் அலைக் கின்றது. நாட்குநாள் தானியவர்க்கம் எல்லாம் குன்றி, அவித்துத்தின்று பசி தீர்வதற்குப் பச்சிலைகிடைப்பதும் அரிதாயிற்று. மனிதரெல்லாம் பசியால்வருந்தி, உடும்பு ஆரித்தாற்போல என்பும் தோலுமாயினர். மனிதரின்