பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

எண்ணற்றன. இக்கால் அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழல்கள், கையூட்டு வாங்குதல், வேலைகளைச் சுணங்கப் போடுதல், வேண்டாதார்க்குப் பலவகையிலும் இருட்டடிப்புச் செய்தல், வேண்டியவர்க்குச் சலுகைகள் காட்டுதல் முதலிய பெரும்பாலான சீர்கேடுகளுக்கும் பார்ப்பனர்களே மிகுதியும் பொறுப்பாவார்கள். வேண்டுமென்றே அவர்கள் இப்படிச் செய்கிறார்கள். இப்படிச் செய்வதால் மக்களுக்கு அரசின்மேல் ஒருவகை வெறுப்பு ஏற்படட்டும் என்பதே இவர்களுடைய எண்ணமாகும். இதைப் பலவகையிலும் மறைப்பதற்காகத் தாங்களாக இக் குற்றச்சாட்டுகளில் முந்திக் கொள்கின்றனர். காலஞ்சென்ற இராசாசி முதல் கல்வி அலுவலகக் கடைசிப் பார்ப்பான்வரை இதை அறிந்திருந்தும் மிகவும் நேர்மையானவரைப் போலவே நடித்துப் பேசி வருகின்றனர்.

இக்கால் அரசு அலுவலகங்களில் பார்ப்பனப் பெண்கள் பணியாற்றவது மிகுந்து வருகின்றது. அப் பெண்களின் நடைமுறைகளில் உள்ள பண்பாட்டுக் குறைவான செய்தியைக் கூறுவதற்கே நாக் கூசும். பார்ப்பன வழக்கறிஞர்கள் சிலர்தம் பெண்டு பிள்ளைகளை வைத்தே வழக்குகளை வெற்றியாக நடத்திக் காட்டிய வரலாறும் உண்டு. தம் இனத்தான் ஒருவன் அலுவலக மேலதிகாரி யாகவோ, அத்துறைச் செயலாளராகவோ வந்துவிட்டால் அவர்களின் கீழ்ப் பணியாற்றும் அனைத்துப் பார்ப்பனர்களும் அவர்களுக்கு எப்படி ஒத்துழைக்கின்றனர் என்பதையும், அவ்வாறில்லாவிடத்து அவர்கள் எப்படிக் கீழறுப்பு வேலை செய்கின்றனர் என்பதையும் அவ்வத்துறைகளில் பணியாற்றும் பிற இன அலுவலர்கள் நன்கு அறிவர்.

அலுவலகங்களில் உள்ள கடவுளர் படங்கள், பிள்ளையார் கோயில்கள், அவற்றுக்கான பூசனை, வழிபாடுகள், திருவிழாத் தண்டல்கள் முதலிய யாவும் ஆங்காங்குள்ள பார்ப்பன அதிகாரிகளின் தூண்டுதல்களே. அந்நிகழ்ச்சிகளால் அவ்வதிகாரிகளின் ஒழுக்கக் கேடுகள், கையூட்டு, ஊழல் நடவடிக்கைகள், இனச் சலுகைகள் பெரிதும் மறைக்கப்படுகின்றன. அவ்வலுவலகங்களில் உள்ள தமிழர்களோ, பிற இனத்தவர்களோ கடந்த காலங்களில் இவற்றைக் கண்டுங் காணாதவர்போல் இருந்து வந்தனர். இக்கால் அவற்றை ஆங்காங்குக் கண்டிக்கத் தொடங்கி யுள்ளனர். எனவே அவர்களுக்குத் துணைபோகும் அரசை அப் பார்ப்பனர்கள் தூற்றத் தொடங்கியுள்ளனர்.