பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

273


அண்மையில் பாரதீய சனதாவின், அதன் தலைவர்களான அத்துவானி, வாச்சுபேயி இவர்களின் நடவடிக்கைகள் இந்தியாவில் உள்ள அனைத்து மக்கள் தலைவர்களுக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியையும் அறக்கேடான(தர்மசங்கடமான்) ஒரு நிலையையும் உண்டாக்கியுள்ளன. தேசிய முன்னணி ஆட்சியின் தலைவர் வி.பி. சிங், அந் நடவடிக்கைகளால் பெரிதும் கலக்கத்திற்கு உள்ளாகிப் போனார்.

மண்டல் குழுவின் அறிக்கைச் செயல்படுத்தம் பற்றி வி.பி. சிங் எடுத்த துணிவான முடிவால், இந்தியாவில் பார்ப்பனியம் பெரும் ஆட்டங்கண்டு போய் உள்ளது. பாபர் மசூதி - இராமர் கோயில் சிக்கல் என்பது வெளிக்கு அவர்கள் கூறுகின்ற காரணமாக இருந்தாலும், இந்த நாட்டில் காலம் காலமாக, அஃதாவ்து ஆரிய வல்லாளுமைக்குப் பின், தன்மூப்பாக அதிகாரக் கொண்டையத்தில் ஏறி நின்று மக்களை அடிமைப்படுத்தி ஆட்டிப் படைத்து, இந்நாட்டிலுள்ள அனைத்து நலன்களையும் தாங்களே ஆண்டு துகர்ந்து (அநுபவித்து) வந்த நிலைக்கு எங்கே ஒரு வீழ்ச்சி ஏற்பட்டு விடுமோ என்ற நிலையில், இந்நாட்டின் மண்ணின் உரிமை மக்களான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அதிகார, ஆட்சி வாய்ப்பு ஏற்படப் போகிறதே என்னும் பொறாமைத் தீயால் புழுங்குகிறார்களே, இங்குள்ள பார்ப்பன மக்கள் - அந்த நிலைதான் உண்மையான அவர்களின் எழுச்சிக்கு அடிப்படையானது.

அவர்களின் இராமர் பிறந்த நிலஇராம ஜன்ம பூமி கோரிக்கை வம்படித்தனமானது; உண்மையில்லாதது; பொய் - புரட்டானது; ஞாயமற்றது; முரட்டுத்தனமானது: மூடத்தனமானது; இனவெறி சான்றது; சூழ்ச்சியானது வன்முறைத் தனமானது, இன்னோர் இனத்தை இகழக் கூடியது; இன அழிவை உள்ளடக்கியது; இராமனுக்கு இந்து என்னும் சொல்லுக்கும் முடிச்சுப் போட்டு, இல்லாத கற்பனைக் கதையை உண்மை என்று மெய்ப்பிக்கும் புரட்டுத் தனமானது.

உண்மையாகப் பார்க்கப் போனால் இராமன் சத்திரியன்; பிராமணன் அல்லன். மேலும் அவன் ஆரிய எதிர்ப்பாளன்; அவனுடைய தந்தை தசரதனோ ஆரிய எதிரி இராமனின் மாமனாராகிய சனகனோ ஆரிய எதிர்ப்பியக்கத்தின் தலைவன்; தமிழ்முனிவர்களின் மெய்ப்பொருள் நூல்களாகிய உபநிடதங்களின் தந்தை. இத்தனை உண்மைகளையும் மறைத்துத் தங்களுக்குச் சார்பு படுத்தித் தங்களை உயர்த்திக் கொண்டனர். ஆரியப் பார்ப்பனர்கள்! ஆரிய எதிர்ப்பாளனாகிய இராமனைத் தங்களின் இனக் காப்பாளனாகவும், தமிழ் முனிவர்களின் மெய்ப்பொருள் நூல்களாகிய உபநிடதங்களைத் தங்களின் வேத நூல்களின் இறுதிப் பகுதிகளாகவும்