பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


ஒரு கரணியம் என்று சொல்வதில் பிழையிருப்பதாகத் தெரியவில்லை. அவரிடம் உள்ள ஏந்துகளுக்கு விடுதலை என்பது சுற்றறிக்கை! அப்படியே, ஆதித்தனாரிடம் இருந்த தமிழ்ப்பற்றுக்குத் தினத்தந்தி என்பது ஒரு குப்பைத்தொட்டி, இவையிரண்டாலும் தமிழனுக்குச் சில அரசியல் பொறுக்குகளும், சில மேலோட்டமான பயன்களும் கிடைக்கலாமே தவிர, அவர்கள் விரும்புகின்ற அடிப்படையான நன்மைகள் கிடைத்துவிடும் என்பதில் நமக்கு நம்பிக்கை இல்லை. இன்னுஞ் சொன்னால் ‘விடுதலை’யால் பெரியார் எங்கிருக்கிறார் என்பதையும், ‘தினத்தந்தி’யால் ஆதித்தனார் எப்படி மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கிறார் என்பதையுந்தாம் நாம் தெரிந்துகொள்ள முடிகின்றது. மற்றபடி அவை வங்காள வீரர்களைப் போல் ஓர் ஆயிரம் பேர்களைக்கூட உருவாக்கிட முடியாது. மற்றபடி வழிபோக்குக்காகப் போட்டுக் கொள்ளப் பெறும். துணிக் கூடாரங்களைப் போன்றவை அவை நிலையாகத் தங்கிக்கொள்ளும் வீடுகளாக அவை பயன்பட முடியாது.

பதிப்பு வேலையில் திரிப்பு!

இனி, ஐந்தாவது ஆரியத் தந்திரம், ஏற்கனவே உள்ள பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிக்கையில் அவற்றில் உள்ள சொற்களுக்கும், கருத்துகளுக்கும் எவ்வாறாகிலும் ஆரிய வடிவம் கற்பித்து, அவர்தம் மரபோடு உரைகள், விளக்கங்கள் அடிக்குறிப்புகள் முதலியவற்றை எழுதி வெளியிடுவது ஆகும்.

இவ்வகையில் பழைய ஓலைச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்துப் பதிப்பித்த அரிய தொண்டுகளைச் செய்தவர் பர். உ.வே. சாமிநாதர் என்ற ஆரியப் பார்ப்பனர் என்பதை நாம் நன்றி உணர்வுடன் நினைக்கின்ற அதே பொழுதில், அவர் அவ்வாறு பதிப்பிக்கையில், அவர் இனத்தின் மேம்பாட்டுக்கென்று திட்டமிட்டுச் செய்த சில செயல்களை மறந்துவிடவும் கூடாது. உ.வே. சா அவர்களின் தொண்டு அளப்பரிய தொண்டு. அதை எவரும் மறுக்க வில்லை. நாமும் அதை நன்றியுடனும் மதிப்புடனும் போற்றவே செய்கின்றோம். அதன் பொருட்டுத் தென்மொழி தொடக்கத்திலேயே அவர் வரலாற்றையும் நடுநிலையினின்றெழுதித் தன் நன்றியை அவர்க்குத் தலைதாழ்த்தித் தெரிவித்துக் கொண்டது. இன்னும் அத் தென்கலைக்குரிசில் தமிழ்மேல் காட்டிய அன்பை நினைந்து நினைந்து வியப்புறுகின்றது தென்மொழி. அவரின் அரிய முயற்சியாகிய குறுந்தொகை உரைப்பதிப்பின் முன்னுரையில் மனங்கசிந்து,