இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
8 ஆரியராவது பின்னும் அதே சங்கீதத்தை ஜப் பானில் அந்த நாட்டின் சக்ரவர்த்தி கட வுளின் வடிவமென்றும், அவரைத் தவிர வழிபட வேண்டிய தெய்வம் வேறு இல்லையென்றும் அந்த மன்னனுக்காக உயிரைக் கொடுப்பதே உத்தம தர்ம மென்றும் உபதேசிக்கக் கூடிய சாகித் தியங்களுடன் தான் உறவு இருந்து கொண்டு வந்திருக்கிறது. இப்படியே மற்ற நாடுகளிலும் பிரான்சில் சிற்றின்ப நுகர்ச்சிகளையும் அமெரிக்காவில் செல்வ வளர்ச்சியையும் குறியாகக் கொண்ட சாகித்தியங்க ளோடுதான் சங்கீதம் நுழைக்கப்பட் டிருக்கிறது. ஆனால், இந்திய நாட்டில் சிறப்பாக நம் தெய்வத் தமிழ் நாட்டில் இசைக்கலை ஏற்பட்ட நாளாகச் சங்கீதத்தைக் கட வுள், அன்பு, கருணை என்பவற்றுடன் மட்டும்தான் இசைத்திருக்கிறார்கள். கட வுளுக்கென்று கட்டப்பட்ட கோயில்களி லெல்லாம் தமிழர்கள் கலைகளையும்