உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 ஆரியராவது கம்பனை விட்டுவிட்டு பாரதியைப் பார்ப்போம். கம்பனையாவது சிலர் கட் சிச் சண்டைக்காக இகழ்ந்து பேசுகி றார்கள். கம்பனை இகழந்து பேசுகிற வர்களும்கூட புதுமைப் புலவ பாரதியைப் புகழ்ந்தே போற்றுகின்ற னர். ஏனெனில் இவர்கள் கட்சிக்குச் சாதகமாக பாரதியார், 'பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே, என்றும் 'பேராசைக் காரனடா பார்ப்பான்- ஆனால் பெரிய துரை என்னினுடல் வேர்ப்பான் பிள்ளைக்குப் பூணூலாமென்பான் - நம்மைப் பிச்சுப் பணம் கொடெனத் தின்பான் பாயும் கடிநாய் போலீசு-காரப் பார்ப்பானுக்கு உண்டிதிலே பீசு' என்றும் பாடி யிருக்கிறார். அப்படிப் பட்ட இந்தத் தலைமுறையின் புலவனாகிய மகா கவி சுப்ரமணிய பாரதி தமிழின் பிறப்பைப் பற்றியும் இந்த அகத்திய னைப் பற்றியும் என்ன சொல்லுகிறார் என்பதைப் பாருங்கள் : தமிழ்த் தாய் சொல்லுகிறாள்: