உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திராவிடராவது 21 ளுக்கு முன் உண்டானது என்று எழுதி யிருக்கிறார்கள். பெரும்பாலும் ஆராய்ச் சிக்காரர்கள் அதைவிடக் குறைவாகத் தான் சொல்லுகிறார்கள். இதைப் பற் றிய எல்லா ஆராய்ச்சிக் காரர்களைப் பற்றியும் எழுதிக் கொண்டிருப்பது சரி யல்ல. ஆனால் இதைப் பற்றி வெகு பாடு பட்டு ஆராய்ந்து மிக நுட்பமான பல ஆதாரங்களைக் காட்டி எழுதியிருக்கிற கடைசி எழுத்தாளர் உயர்திரு கா.சுப்ர மணியப் பிள்ளை அவர்கள், எம்.ஏ., எம்.எல். இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பேராசிரியராக இருந்தவர். தாகூர் ஞாபகார்த்தப் பரிசு' என்று சட்ட விரிவுரைப் போட்டியில் கல்கத்தா சர்வகலாசாலையில் ரூபாய் ஆறாயிரம் பரிசு பெற்றவர். இவர் தமது ஆராய்ச்சியில் தொல்காப்பியப் பொரு ளதிகாரக் கருத்து என்ற நூலில் தொல் காப்பியருடைய காலம் குறைந்தது நாலாயிரத்து நானூறு வருஷங்களுக்கு முற்பட்டது என்று நிச்சயிக்கிறார்.