உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

30. ஆரியராவது திருக்க முடியாது. தமிழ் மட்டும் அல்ல, பல மொழிகளைப் பேசுகின்ற பலநாட்டு மக்களுடன் பழகி வருகின்ற எவருடைய மொழியும் கலப்பில்லாத தனிமொழி யாக இருக்க முடியாது. ஆகையால் வட மொழி கலக்காத காலத்திலும் தனித் தமிழ் என்ற ஒரு மொழி வழங்கின தில்லை. அனால் 'செந்தமிழ்' என்று இப்போதுள்ளவர்களுக்குக் 'கடுந்தமிழ்' ஆகியிருக்கிற ஒரு தமிழ் இருந்ததுண்டு. அது இன்னும் நம்மிடையே வேறு மொழிகளை விரும்பாத சிலரிடம் இருந்து வருகிறது. அதைத்தான் அவர்கள் 'தனித்தமிழ்' என்று கருதுகிறார்கள் போலும். ஆனால் அந்தத் தமிழ் நெடு நாளைக்கு முன்னாலேயே வழக்கிழந்து பொதுமக்களுக்குப் புரியாததாகி விட் டது. சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்னாலேயே இந்தக் கடுந்தமிழ் செந் தமிழ் நடைக்குச் சிறப்பிடமாகிய யாழ்ப்பாணத்திலேயே பயனற்றுப் போன உண்மையைப் பார்ப்போம்.