உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திராவிடராவது 35 அந்த நீதிபதி நாவலரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, போதும் உங்கள் இங் கிலீஷ் என்று சொல்லி, கச்சேரி மொழி பெயர்ப்பாளரைப் பார்த்து '" அவரை (இன்டர்ப்ரட்டர்) அவருடைய தாய் மொழியிலேயே பதில் சொல்லச் சொல்லு " என்றார். அதைக் கேட்ட ஆறுமுக நாவலர் அவமான மடைந்து விட்டார். பிறகு தமிழிலேயே கேள்விகள் கேட்கப்பட்டன. " உமக்கு இந்தக் கேசைப் பற்றி என்ன தெரி யும்?" என்பதைப்போன்ற கேள்விக்கு விடையாக நாவலரவர்கள், 64 அஞ்ஞான்று எல்லியெழ நானாளிப் போதின்வாய் ஆழிவரம்பணித்தே காலேற்று காலோட்டப் புக்குழி.' என்று நிறுத்தி அதை துரையவர் களுக்கு மொழி பெயர்த்துச் சொல்லச் சொன்னார். அதை குமாஸ்தா மொழிபெயர்க்க முடியாமல் முழி பெயர்க்க விழித்தார்.