உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

74 ஆரியராவது வெகு சந்தோஷப்பட்ட மாணிக்க நாய்க் கர் தாம் விஜய நகர மன்னர்களின் தொடர்புடையவர் என்று சொல்லிக் கொள்ள நேர்ந்தது எப்படியென்பதைக் கேளுங்கள். மாணிக்க நாய்க்கருக்குச் சொந்த ஊர் சேலத்தை அடுத்த பாகல்பட்டி என்ற சிறு கிராமம். அதன் அருகில் ஒரு மண் மேடு உண்டு. அது வெகு காலத்துக்கு முன் அழிந்துபோன ஒரு அரண்மனை யாக இருக்கக் கூடும் என்று அனுமா னிக்கப்பட்டது. அப்படியானால் அதில் ஏராளமான செல்வம் புதைந்திருக்க லாம். அந்தச் செல்வத்தைத் தோண்டி எடுக்க நேர்ந்தால் அது யாரைச் சேர வேண்டியது? சாதாரணமாக அது அர சாங்கத்தைச் சேரும். அப்படி அது அர சாங்கத்துக்குப் போய்விட விடுவானேன் என்ற எண்ணம் மாணிக்க நாய்க்கருக்கு எழுந்தது. பாகல்பட்டி என்பது ஒரு சிறு ஜமீன். அந்த ஜமீனுக்கு ஒரு காலத்தில் மாணிக்க நாய்க்கரின் முன் !