உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ் நாடு தமிழ் நாடு ஒரு தனி மாகாணம் ஆகவேண்டும் என்பதும், அதில் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் ஆதிக்கம் இருக்க வேண்டும் என்பதும் மிகவும் சரியான உரிமைகள். பாஷா வாரி யாக மாகாணங்களைப் பிரிக்கிற போது தமிழ் நாடு ஒரு தனி மாகாணமாக்கப் படும் என்றுதான் எதிர் பார்க்கிறோம். அன்றியும் திருவாங்கூரின் தெற்கிலும், தென் கிழக்கிலும் தமிழர்களே பெருந் தொகையாக இருக்கிற பகுதிகளையும் தமிழ் மாகாணத்தோடு சேர்க்க வேண்டும் என்று செய்யப்பட்டு வரும் முயற்சியும் மிகவும் நியாயமானது. தமிழ் நாடு என்று சொல்லும்போது வெறும் இறந்த கால உண்மைகளை மட் டும் எண்ணாமல் நிகழ்கால நியாயங்களை யும் எதிர்கால நோக்கங்களையும் சேர்த்து எண்ண வேண்டும். சரித்திர உண்மை யாக தமிழ் நாட்டின் எல்லை, வடக்கே