உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

6 ஆரியராவது: லுக்குத் தூண்டிவிடக் கூடிய ஒரு கலை. இன்னது செய் என்று குறிப்பாக ஒரு செயலையும் சொல்லாமல் வெறும் பொழுதுபோக்குப் படிப்பிற்கென்று எழுதப் படுகிறவைகளிலும் உணர்ச்சி யைக் கிளப்பிச் செயலுக்கு ஊக்கிவிடக் கூடிய சூழ்நிலைகள் நம்மை அறியா மலேயும் அமைகின்றன. பெரும்பாலும் எழுத்துக்கள் செயலைத் தூண்டத்தான் செய்யப்படுகின்றன. அவற்றில் கலைத் திறம் எவ்வளவு கலந்திருக்கின்றதோ அவ்வளவு செயலும் நிகழும். எல்லாக் கலைகளும் அப்படித்தான். ஆனால் வெவ்வேறு நாட்டில் வெவ்வேறு கலை களை வெவ்வேறு காரியங்களுக்காகப் பிரயோகப் படுத்தி யிருக்கிறார்கள். உதாரணமாக, சங்கீதக் கலையை எடுத்துக் கொள்வோம். சங்கீதத்தை எந்த சாகித்யத்தோடு சேர்க்கிறோமோ அந்த சாகியத்திலுள்ள செயலை அல் லது குணத்தை அது தூண்டுகின்றது.