________________
92 ஆரியராவது ராமா ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தத் தமிழ்ப் பண்பு அங்கங்கே சிறிது காணப்படும். வடமொழியிலுள்ள நளன் கதையையும், புகழேந்தி பாடிய நளவெண்பாவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே இந்தத் தமிழ்ப் பண்பை முன்னிலும் அதிக மாகக் காணலாம். வான்மீகி யணத்தையும், கம்பராமாயணத்தையும் அவற்றுள் ஒப்பு காண்பதே அரிது. கதா பாத்திரங்களாகிய பேர்களும் ஊர் களும் தவிர மற்றெல்லா நிகழ்ச்சிகளும் கதைப் போக்கும் கதாபாத்திரங்களின் குணங்களும் நடவடிக்கைகளும் முற்றி லும் மாறுபட்டிருக்கும். இந்த மாறு பாடுகள் எல்லாம் வட நாட்டுப் பண்புக் கும் தமிழ் நாட்டுப் பண்புக்கும் உள்ள வித்தியாசங்களே.அங்குள்ள மாறு பாடுகள் அனைத்தும் தமிழ்ப் பண்பினால் தரப்பட்டவை என்பது எளிதில்தெரியும். வடமொழி இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர்க ளெல்லாம் அந்த இலக்கியங்களின் முக்கிய கருத்துக்