பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

7


என்றாலும் வழிதவறிச் சென்றிருப்பதால், அவர்கள் உரை, தவறான உரையாக இருக்கக்கூடும் என நான் எண்ணிவிடும் இடங்களில் அவர்கள் கூறுவதிலிருந்து வேறுபட, நான் தயங்கியதில்லை.

தமிழும் ஆங்கிலமும் மொழி அமைப்பில், ஒன்றிலிருந்து ஒன்று மிகப் பெரிய அளவில் வேறுபட்டு இருப்பதால், எடுத்தாளும் செய்யுள்கள் எளிமையில் பொருள் விளங்கக்கூடியனவாக இருப்பினும், அவற்றை மொழி பெயர்ப்பது கடினமாகவே உளது. மேலும் தமிழ்ப் புலவர்கள், குறிப்பாக கி.பி. ஐந்து ஆறாம் நூற்றாண்டினரான பிற்காலப் புலவர்கள், தம்முடைய செய்யுட்களில், சொற்றொடர்க்கு மேல் சொற்றொடர்களையும், அடைமொழிக்கு மேல் அடைமொழியினையும் அடுக்கிக் குவிப்பதில் அளவின்றி ஆர்வம் காட்டியிருப்பது நேரிடை மொழி பெயர்ப்பைப் பெரும்பாலும் இயலாததாக ஆக்கியுளது. ஆனால் இம்மொழிபெயர்ப்புகள் ஒரு வரலாற்றுப் பயன் குறித்து ஆதலின், அவ்வப்போது மீறி, பொருள் விளக்க நிலை மொழிபெயர்ப்பு முறையினை மேற்கொண்டுள்ளேன். ஆயினும், அம்மொழி பெயர்ப்பு, படித்துப் பொருள் உணர்ந்து கொள்ளக்கூடிய ஒன்றே என்பதை உணர்த்தும் என நம்புகின்றேன். என்னுடைய மொழிபெயர்ப்பு எங்கெல்லாம் பிழைபட்டிருப்பதாக உணர்கின்றனரோ, அவை அனைத்தையும் என் நோக்கிற்குக் கொண்டுவருமாறு தமிழறிஞர்களை வேண்டிக் கொள்கிறேன், எங்ஙனமாயினும், செய்யுள் மூலத்தை எந்த இடத்திலும் பொருட்பிழைபட உணர்த்தியிருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஆண்டுகள் வழி நிகழ்ச்சி நிரல்

ஆண்டுகள் வழி நிகழ்ச்சிநிரல், வரலாற்றின் கண்ணாயின் பண்டைய இந்திய வரலாறு எப்போதும் குருடாகவே இருக்கும். உண்மைகள் அதாவது கணக்குப் பிறழாத, சரியான தேதிகள், மிகமிக அருகேயே தேவைப்படும் என்பதால் மக்கள் வாழ்வியல் வளர்ச்சி பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்கள் அவ்வாய்வுக்கு அடுத்தடுத்து