பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

தமிழர் பண்பாடு


இந்தியா முழுவதும், சிவனைக் குறிக்க எல்லோர்க்கும் விளங்கும் வடிவமாகும். லிங்க வழிபாடு, ஆரியர் வருகைக்கு மிகவும் முற்பட்ட, நன்மிகப் பழைய வழிபாட்டு முறையாம் என்பதில் எவ்வித வினாவிற்கும் இடம் இல்லை.'’ என்கிறார் திருவாளர் ஜான் மார்ஷெல் அவர்கள். (Archaeological Survey of India. Annual Report. 1925-26, page:79)

தென்னிந்தியாவில், கி.பி. 500க்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த பாடல்களில், சிவன், ஆலமர் செல்வனாகவே கூறப்பட்டுள்ளான் என்பது ஈண்டுக் குறிப்பிடல் பொருந்தும், புறநானூறு பாட்டு ஒன்று, ஆலமரத்தைக் கடவுளுக்கு உரியதாகக் கூறுகிறது. ‘கடவுள் ஆலம்'’ (1:7) வேறுசில பாடல்கள், சிவனை, ஆலில் உறையும் இறைவனாம் எனத் தெளிவாக உணர்த்துகின்றன. “ஆலமர் செல்வன்'’ (சிறுபாணாற்றுப்படை: 1:97; கலித்தொகை : 81:9:83:45), "ஆல்கெழு கடவுள்” (திருமுருகாற்றுப்படை : 256). இப்பாடல்கள், ஆரியக் கருத்துகள், தமிழ்ப்பாடல்களிடையே இடம் பெறத் தொடங்கிய காலத்தைச் சேர்ந்தவை என்றாலும் கந்து எனப்படும் கம்பத்தில் இடம் பெற்ற கடவுளும், ஆலமரத்தில் இடம் பெற்ற கடவுளும் ஒன்றே. பண்டைத் தமிழ் இலக்கிய காலத்தில் சிவன், ஒரு நிலத்தின் தெய்வமாக இடம் பெறவில்லை. அவன் ஒரு சிறு தெய்வமே முருகனுக்குத் தந்தையாக உணர்ந்து முடிவாக, ஐந்து ஆறு நூற்றாண்டுகளில், சைவ ஆகம நெறி, தமிழ்நாட்டில் பரவியபோது பெருந்தெய்வம் ஆயினான். வட இந்திய ருத்ரன், தொடக்கத்தில், ஒரு மலைநாட்டுத் தலைவன் மகளை மணந்து கொண்ட ஒரு மலைக்கடவுளாவன். ஆகவே அவன் தங்கள் தவ ஒழுக்கத்தை மேற்கொள்வான் வேண்டி - மலைகளில் சென்று தங்கும் யோகியர்களுக்குக் கடவுளாகி விட்டான். தென்னாட்டிற்கு அவன் குடிபெயர்ந்ததும், சிவவழிபாடு சிறந்து வளர்ச்சியைப் பெற்று விட்டது. ஆனால் அது நிகழ்வதற்கு முன்னர், கிடைக்கக் கூடிய நனிமிகப் பழைய தமிழ்ப்பாடல்களில் காணப்படுவது போல், தமிழ் நாட்டில், அவன் ஆலமரத்துக் கடவுளாகவே இருந்துள்ளான், ஒருவேளை, ஆலமரத்து நிழலில் ஒரு லிங்கம்