பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

தமிழர் பண்பாடு


அரி அரியாகப் போட்டுப் பணி முடிந்த உழவர், தங்களுக்குக் குடங்களைக் கொண்டுவரும் வண்டி, சேற்றில் ஆழ்ந்துவிடின், அதுபோக்கச் சிறந்த கரும்புத்தடிகளை அடுக்கி இடை யெடுக்கும், பாயும் புனலால் வளம்மிக்க ஊரின் தலைவனே! நெற்பொரிகள் போலும், புன்கம்பூ மலர்கள் உதிர்ந்து கிடக்கும் அகன்ற நீர்த்துறைகள் அழகு பெற , ஒளிவீசும் நெற்றியும், நல்மணம் மிக்க மலர்கள் சூடிய, காண்பதற்கு இனிமை தரும் திரண்ட கூந்தலும், மாவடுக்கள் போலும் கண்களும், மார்பில் அசையும் முத்துச் சரமும், இவற்றால் பூம் நுண்ணிய அழகும் உடையாளோர் இளம் பரத்தையொடு, இடையறாது ஓடிக்கொண்டே இருக்கும் புனலில், நேற்று விளையாடி மகிழ்ந்தனை என்று ஊரார் பலரும் கூறுவர். ஆகவே, உறுதியாக, நீ, நாணம் இழந்தவனே”.

"எரி அசைந்தன்னை தாமரை இடையிடை
அரிந்துகால் குவித்த செந்நெல் லினைஞர்,
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்றுரின்,
ஆய்கரும்பு அடுக்கம் பாய்புனல் ஊர:
பெரிய, நாணிலை மன்ற; பொரி எனப்
புன்கு அவிழ் அகன்றுறைப் பொலிய, ஒன்துதல்,
நறுமலர்க் காண்வரும் குறும்பல் கூந்தல்,
மாழைநோக்கின், காழ் இயல் வனமுலை
எஃகுடை எழில்நலத்து ஒருத்தி யொடு, நெருநை
வைகுபுனல் அயர்ந்தனை”.
                   அகம் : 116 : 1-10

கடற்கரை நிலப்பரப்பில்

கடற்கரை நிலப்பரப்பாம் நெய்தல் நிலத்தின் முக்கியத் தொழில், மீன்பிடித்தல், அத்தொழில், பாடல் புனையும் தம் புலமைக்கு ஏலா இழிவுடைப் பொருளாம் என்று புலவர் கருத வில்லை , ‘'கதிரிட்டு முறுக்கித் திருத்தமாகச் செய்யப்பட்ட வலிய கயிற்றால் பின்னப்பட்ட “ பெரிய பெரிய மீன்பிடி வலைகளை, இடிபோல் முழங்கும் அலைகள் ஓயாக் கடலில் இரும்பொருட்டு, அவ்வலைகள்