பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

3



என்னென்ன பேணிக்காக்கப்பட்டுள்ளனவோ அவற்றிலிருந்தும் சமஸ்கிருதம், பாலி, கிரேக்கம் ஆகிய மொழிகளிலும் இலத்தீன் தொன்மை வாய்ந்த) ஆவணக் குறிப்புகளிலிலும் இவர் பற்றிக் கூறியிருக்கும் குறிப்புகளிலிருந்தும், பெறக்கூடிய தமிழர் வரலாற்றின் மறு தொகுப்பிற்கான ஒரு முயற்சியே இந்நூல்.

வரலாற்று மூலங்கள்

தனி ஒருவர், மற்றும் சமூக வாழ்வின் குறிக்கோள் ஒழுக்கம் பற்றிய ஆரியரின் பழங்கருத்துகளைக் கொண்டிருப்பதான, மந்திரங்கள், பிராமணம் என்ற பொருளில் நான் கொள்வதான வேத இலக்கியம் (இரண்டுமே ஒரு சேர இருந்து வேதங்கள் எனப்படுவன வாகி) மற்றும் சூத்திரம், அதுபோலவே இராமாயணம், மகாபாரத இதிகாசங்கள், புராணங்கள், பெளத்த, அர்த்தமாக ஜெயின் பழம்பெரும் பாலி மொழியிலான இலக்கியங்கள், அதாவது, ஆரிய வரலாற்று மூலங்கள் அனைத்தும், வரலாற்றுச் செய்திகளுக்காக முழுமையாகத் துருவித் துருவி ஆராயப்பட்டு விட்டன. இவை போலும் வரலாற்று மூலங்களிலிருந்து பெறப்படும் செய்திகள் ஆரியர்கள், தமிழர்களோடு கொண்ட தொடர்பினை மட்டுமே விளக்கும் என்பது சொல்லாமலே விளங்கும்.

வட இந்தியப் பழங்கதைகளைக் குறிப்பாகப் புராணங்களில் கூறப்பட்டிருக்கும் பழங்கதைகளை எடுத்தாளும் நிலையில், நான். திருவாளர் பர்கிதர் அவர்களின் நுணுகிய ஆய்வு முறையினையும் முடிவுகளையும், பெரும்பாலும் முழுமையாகப் பின்பற்றியுள்ளேன். இக்குவாகு காலத்திற்கும் ஸ்ரீ கிருஷ்ணன் காலத்திற்கும் இடையில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் வந்து வந்து காட்சி அளித்துப் படிப்பவரைக் குழப்பத்திற் குள்ளாக்குவோர்களாய அகஸ்தியர் ஒரே அகஸ்தியர் அல்லர், வசிஷ்டர், ஒரே வசிஷ்டர் அல்லர், விசுவாமித்திரர், ஒரே விசுவாமித்திரர் அல்லர். அந்தந்த நூற்றாண்டுகளில் ஒவ்வொரு பெயர் கொண்டு வாழ்ந்த