பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆகமங்களின் தோற்றம்

77


போதைக்கும் அடிமைப்பட்டுப் போன உள்ளத்தோடு, இன்ப நுகர்விலும் அதிகார போதையிலும் ஈடுபாடு கொண்டுவிடும் அவர்களின் புத்தி, அவர்களுக்குச் சிறிதே அறிவினைத் தருமாயினும், அமைதியான தியானத்தில் நிலையாக நிற்காது. வேதம், மூன்று குணங்களால் உருவான பொருள்களைப் பற்றிக் கூறுகிறது. ஆனால், அர்ஜ்ஜூனா! அம் முக்குணங் களால் உருவாகும் பொருள்களுக்கு அப்பாற்பட்டவனாக இருப்பாயாக இவையல்லாமல், ஆகமங்களுக்கே உரியவாய எண்ணற்ற சொற்கள் பகவத்கீதையில் இடம்பெற்றுள்ளன.

யாமிமாம் புஷ்யிதாம் வாசம் ப்ரவதந்த அவிஷ்கிதஹ
வேதவாத ரத்ஹாஹ பார்த்த ! நான்யத் அஸ்திதி வாதிஹை
காமரத் மாஹ ஸ்வர்க்க பரர்ஹ ஜன்மகர்ம பஹல பிரதாம்
கிரியாவிஸேஷ பஹலாம் போகைஸ்வரிய பஹலம்ப்ரதி
போகைஸ்வர்ய ப்ரஸக்தனாம் தயா அப்ஹ்ருத செதஸாம்
வ்யவஸாயாத்மிகா புத்திஹி சமாதெளன விதியதெ
த்ரைகுண்ய விஷ்யா வேதா நிஸ்த்ரை
                             குண்யொ பவராஜுலர்
                                      - பகவத் கீதை - 2 42-45


வைதீகர்கள், இதற்கு மாறாக, ஆகம வழிபாட்டினரை நனிமிக இழிந்தவராகவே மதித்தனர். இது பண்டை ஆரியர்கள், மந்திரம் ஓதும் தஸ்யூக்களை, 'ம்ரித்ரவாஹ' என அழைத்து வந்த ஏளனத்தின் தொடர்பே அல்லது வேறு அன்று. இவ்வெறுப்பு வளர்ச்சியின் அடையாளம் இன்றும் காணக்கூடியதே. வைதீக நெறியும், ஆகம நெறியும், யாமுனாச்சாரியர் காலம் தொட்டே, ஒரே நெறியாக இரண்டறக் கலந்துவிட்டன என்றாலும், சைவம் வைஷ்ண வம் ஆகிய இரு சமயங்களையும் சார்ந்த கோயில் குருக்களைப் பொறுத்தமட்டில், கொடிய வேதாந்திகளால் இழிகுலப் பிராமணர்களாகவே மதிக்கப்பட்டனர். உண்மையில், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரும் கூட எனக்குத் தெரிந்த வகையில், எந்தக் கோயிலுக்கும் நுழையாத அத்வைத வேதாந்திகள் இருந்துள்ளனர்; வேதத்தின் முடிந்த முடிபாகிய வேதாந்தமும், ஆகமவழிபாட்டு நெறியை