பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21


கெண்ட் கேனி

1852 இல் டாக்டர் எலிசா கெண்ட் கேனி என்பார் அமெரிக்க அரசாங்க ஆதரவில் தம் பயணத்தை மேற்கொண்டார். ஆர்க்டிக் ஆராய்ச்சியில் இவரது பயணம் சிறந்தது. ஆர்க்டிக்கின் பயிர், விலங்கு, காந்த நிலைமைகள், தட்ப வெப்ப நிலை பற்றி மதிப்பிடற்கரிய செய்திகள் கிடைத்தன . எஸ்கிமோக்களைப் பற்றியும் முறையாகச் செய்திகளைத் திரட்ட முடிந்தது.

கிரீன்லாந்திற்கு மேற்கே, ஆர்க்டிக் கடலுக்கும் ஸ்மித் சவுண்டு என்னுமிடத்திற்கும் இடையே சிறந்த நீர் வழிகள் உள்ளன. இவற்றின் வாயிலாக வடமுனையை எளிதாக அடையலாம் என்பதும் அறியப்பட்டது.

கிரீலி

1883 இல் அமெரிக்கப் போர்ப்படையைச் சார்ந்த லெப்டினண்ட் கிரீலி என்பார் ஆர்க்டிக் கில் லேடி பிராங்கிளின் விரிகுடாவைச் சுற்றி ஆராய்ந்தார். அப் பகுதியின் காந்த ஆற்றல், அலை எழுச்சிகள், தட்ப வெப்பநிலை, பயிர், விலங்கு ஆகியவை பற்றிப் பல அரிய உற்று நோக்கல்கள் செய்தார்.

பியரி

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆர்க்டிக் ஆராய்ச்சியில் அரிய நிகழ்ச்சி ஒன்று நடந்தது. 1909 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 இல் அமெரிக்க ஆராய்ச்சியாளர் ராபர்ட் பியரி என்பார் முதன்

1 - B - 601