உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முரசு ஜூன்15u நாள் காலையில் சென்னையிலிருந்து திருச்சி நோக்கிப் புறப்பட்ட ஆகாய விமானம் என்னையும் தோழர் முல்லை சத்தியத்தையும் தூக்கிக்கொண்டு பறந்தது. தேவையான, வழக்கமான வேகத்தில் விமானம் பறந்து சென்றாலுங்கூட காற்றையும் முகில்களையும் அளவுக்கு மீறிய வேகத்துடன் அது கிழித்துச் செல்வதாகவே நாங் கள் எண்ணினோம். உண்மையில் அந்தப் பறக்கும் இயந் திரத்தில் அவ்வளவு வேகமில்லை. எங்களின் மனோவேகக் தான் அப்படி யிருந்தது. என்றுமில்லாத புத்துணர்ச்சி. தோளிலே தினவு. ள்ளமெல்லாம் உவகைக் கூத்து. காரணம் என்ன? உ கல்லக்குடியிலே களம். அதற்கு நான் படைத் தலை வன். அந்த இன்பச் சேதி கேட்டு என்னுடன் தொடர்ந்த சத்தி. இருவர் இதயமும் அந்நிலையை அடைய இதைவிட வேறு காரணம் என்ன தேவை. வீதிக்கு வீதி பல வீட் டுப் புலித் தமிழர் வில்லேந்தி வாழ்ந்தனர் என்று நமது புறநானூறு பேசுகிறது. மலர்தூவிய மஞ்சத்திலே யிருப் பார்களாம்; போர் முரசின் ஒலி கிளம்புமாம் - கடைசி முத் தமாயிருப்பினும் இருக்கும் எனக் களிப்புடன் கூறி- கண் ணீர் நிறைந்த காதலியரின் கன்னங்களிலே அன்பைப் புதித்துவிட்டு மழவர்கள் தோள் தட்டி ஓடுவார்களாம். எஞ்சியுள்ள தமிழரின் வீரக் கவிதைகள் அந்த தித்திப் பான செய்திகளை நமக்கு சொல்லித்தான் வைத்திருக்