உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

108 கருணாநிதி நாட்டுப்பற்றும் - திராவிட இனப்பற்றும் கொண்ட வருமான திருச்சி கலைமகள் பிரஸ் தோழர் ராதாகி கிருஷ் ணன் கைது செய்யப்பட்டார். அவர் என்ன ஆனார் என்று பார்க்கச்சென்ற திருச்சி முஸ்லீம் இளைஞர் முன்னணி தோழர் ஐ.எம். ஷரீபும் காவலில் வைக்கப்பட்டார். - தூத்துக்குடி செயல் மணிகளும் எதையும் தாங்கும் இதயம் போன்ற சிங்க ஏறுகளும் -கண்ணியம்-கட்டுப்பாடு கடமையுணர்ச்சிகளில் கடுகளவும் வழுவாத கழகத்தின் கண்மணிகளுமான தோழர்கள் தங்கப்பழம் - சிவசாமி- கே. வி. கே. சாமி நடராசன் - ரத்தினம் முதலிய என்ப துக்கு மேற்பட்ட தோழர்களும் சதிவழக்கில் சம்மந்தப் படுத்தப்பட வேண்டும் என்ற திட்டத்தோடு கைது செய் யப்பட்டார்கள். சென்னையிலே ஆச்சாரியார் வீட்டுக்கு முன்பு மறியல் நடத்துவதற்காகச் சென்ற ஐம்பதுக்கு மேற்பட்ட தோழர்களும் அந்த அணிவகுப்புக்குத் தலைமை யேற்று நடத்திய வீராங்கனை தோழியர் சத்தியவாணிமுத்து அம்மையாரும், காஞ்சி ராசகோபாலும் ஜூலை 145 தேதியன்று கைது செய்யப்பட்டார்கள். 15ம் நாள் மறியல் போராட்டத்திற்குத் தலைமை வகித்த தஞ்சை பூமி தந்த அஞ்சாநெஞ்சர் - தர்க்கத் தால் தருக்கரை விரட்டும் தகைமையாளர் - இனப்போர்த் தளபதி N.S.இளங்கோவும், வேதாசலம் முதலிய ஐம் பதுக்கு மேற்பட்ட தோழர்களும் கைது செய்யப்பட் டார்கள் சென்னையிலே! யா 16ம் நாள் - ஆயிரம் இடர் அடுக்கி வரினும் - அசை த மன உறுதி படைத்தவரும் - வடாற்காடு மாவட்டத்