உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

164 கருணாநிதி கண்ணன நேரம் - பொன்னுன வாய்ப்பு! நீ படிக்க விரும்புகிறாயா? பள்ளியுண்டு சிறையிலே! ஆங்கில தமிழ் நூல்கள் நிறைந்த புத்தக நிலையம் உண்டு. உள்ளங் கவர்ந்த ஆசிரியர்களின் ஏடுகளை நீங்கள் தேர்ந் தெடுக்கலாம். எழுத படிக்க - கற்க முடியும். அவ்வழி செல்ல ஆசிரியரை நாடுக - பொன்னான இவ்வாய்ப்டை இழக்காதீர்கள். சிறந்த மனிதர்கள், சிறையிலே தான் பல கருத்துக்களை பெற்றிருக்கிறார்கள். [குறிப்பு: வாசகசாலையையும், பள்ளியையும் பெரும்பா லும் அரசியல் கைதிகள் தான் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது - ஆர்.) உடைகள் : உனக்கு இரண்டு ஜோடி துணிகளும், ஒரு படுக்கை யும் தரப்படும். உடைகளை ஒன்பது மாதங்கள் வரையில் உபயோகிக்க வேண்டும். அவைகளை சுத்தமாகவும், கால வரையறைக்குமேல் உழைக்க கூடியதாகவும் வைத்துக் கொண்டால், அதற்காக தனி நாட்குறைப்பு உண்டு. இந்த சலுகைக்கு நாங்கள் ஆக்கம் தருவோம். வேண் மென்றே உடைகளை வீணாக்கினால் தண்டனை உண்டு என்பதை மறவாதே. முதல் அறிவுரையையே நீ பின் பற்றுவாய் என்பது உ றுதி. பேட்டியும் கடிதமும்: ஒவ்வொருவரும் நண்பர்களையும், உறவினர்களையும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை பேட்டி காணவும் - மாதம் இருமுறை கடிதஙகள் எழுதவும் வந்த கடிதங்களைப் பெறவும் அனுமதிக்கப் படுவார்கள். தனி சலுகையும் தரப்படும். ஆனா கண்ணியமாய் நடப் பவருக்கே இந்த சலுகை என்பதை மறவாதே.