உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 169 பட்டார். சிருஷ்டிக்கப்பட்டார். பயத்திலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள மனிதன் போட்ட ஓலம் தான் கடவுள் ! இப்போதும் கடவுளை நினைப்பவன் - “ கடவுள் துணை என்று நினைப்பதிலிருந்தே - துணைக்காகப் பயன்படுத்தப் பட்ட - பயத்திலிருந்து விடுபட உபயோகிக்கப்பட்ட ஒரு ஆறுதல் சொல்தான் கடவுள் என்பது வெள்ளிடைமலை. நாம் அந்த,சொல்லுக்கு விரோதிகளல்ல! அந்தச் சொல்லை வைத்துக்கொண்டு சுரண்டிப் பிழைப்போர் - அந்தச் சொல்தான் மக்களை சொர்க்கத்துக்கு இட்டுச் செல்லும் எனக் கூறி சூது நடுத்துவோர் - அந்தச் சொல்லை உச்சரித்து இவ்வுலகில் ஏற்படும் தொல்லை களைத் தாங்கிக்கொண்டு - தவளைபோல், எலிபோல் வாழ வேண்டுமென உபதேசிப்போர் - வறுமையின் தென் துரு வமும் - செல்வத்தின் வடதுருவமும் - அந்தச் சொல்லின் மகத்துவம் ஆகவே இரு துருவங்களும் ஒன்றாக முடியாது - அப்படி ஒன்றாக்க முயற்சிப்பது அந்த சொல்லுக்கு விரோதம் - எனக் கதைகட்டும் காவியுடைப் பண்டாரத்தார் - ஆகியவர்கள் தான் நமக்கு விரோதிகள், அருமையான வைரம் - அதைத் தற்கொலை செய்து கொள்ள ஒரு சமுதாயம் பயன்படுத்துகிறது என்றால் - வைரமானாலும் பரவாயில்லையென்று உடைத்துக் கடலிலே எறியவேண்டியது தானே! சுவையான சொல்லாயிருக்கலாம் கடவுள் என்பது! தற்கொலைக்கு உபயோகமாகும் வைரமாக மாறும்போது என்ன செய்யமுடியும்? இந்தக் கேள்வியை எழுப்புவதுதான் நாத்திக வாத மாம் - நாமெல்லாம் நாட்டுக்கு கேடு தருபவர்களாம்!