உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 15 தகையவர் தனது வியாபாரத்திலேயே கவனம் செலுத்தி யிருந்த காலம் ஒன்றிருந்தது. மிக விரைவில் கழகத் தொண்டராகி -மேதாப் என்ற வடநாட்டு மந்திரி வந்த போது கருப்புக்கொடி காட்டி, சிறைப்பட்டு, போலீசாரால் தாக்கப்பட்டு, பின்னர் திருச்சியிலே கழக முதல்வர்களிலே ஒருவராக ஆகிவிடக்கூடிய அளவுக்கு வளர்ந்துவிட்டார் - இல்லை கழகத் தின் கண்ணியமான கொள்கைகள் அவரை இழுத்துவந்துவிட்டன. முக்கியமான பொறுப்புக்களை ஏற் றுக் கொள்ளாவிட்டாலும், திருச்சி கழகத்திற்கு முடிந்த அளவு தொண்டும், சிறு சிறு பண உதவிகளும் கழக வளர்ச்சி பற்றிய ஆக்கவேலைக் குழுவின் ஆலோசகராக யிருந்து காரியமாற்றும் உதவியும், அவரால் தவறாது கிடைத்து வருகிறது. அழைக்க வந்தவரில் இன்னொருவர் எம். எஸ். மணி. அவரை முன்பெல்லாம் எனக்கு அவ்வளவாகப் பிடிக் காது. காரணம்; நான் எப்போது திருச்சி சென்றாலும், திராவிடப் பண்ணையின் மாடியிலிருந்த கழக அலுவலகத் தில் அமர்ந்து கணக்குப் பார்ப்பதும், கடிதங்கள் எழுது வதும், ஆகிய இந்த வேலைகளை அவருக்கே உரித்தான சுறு சுறுப்போடு செய்துகொண்டிருப்பாரே தவிர - என் னோடு சரியாகக்கூடப் பேசமாட்டார். பிறகு திருச்சி கழகத் திலே எனக்குத் தொடர்பு வலுப்பட, வலுப்பட, தோழர் மணி எனக்கு மிகவும் பிடித்தமானவராகிவிட்டார். கட மையிலே அவருக்கிருந்து கருத்தும், அதற்காக அவர் எடுத்துக்கொண்ட சிரமங்களும், என் அனுதாபத்தை என்னை அறியாமலே பெற்றுக்கொண்டுபோய் மணியின் கழுத்தில் மாலையாக்கிப் போட்டன. பத்துநாளோ - இரு பது நாளோ குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படாமல் கட்சிப் பணிகள் புரிந்தபடி யிருப்பார். திராவிடப் பண்ணை