உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 189 மொழியிலே பற்றா? அல்லது பித்தா? என்று ஆராய்வதற்கு முன்பு-பற்று என்பதற்கும் பித்து என் பதற்கும் உள்ள வேறுபாட்டை உணரவேண்டும்.பற்றின் உச்ச நிலைதான் பித்து. அந்தப் பித்து, தானே உண்டாவ தில்லை. பற்று வைக்கப்பட்ட பொருளுக்கு ஆபத்து வரும்போது அப்பொருளின் மீது பித்து ஏற்படுகிறது. குழந்தையின் மீது தாய்க்கு அளவற்ற பற்று. குழந்தை திடீரென நோய்வாய்ப் படுகிறது. இறந்துவிடுமெ மருத்துவர்கள் கூறுகிறார்கள். தாய்க்குப் பைத்தியம் பிடித்துவிடுகிறது. அதை யாராவது தடுக்க முடியுமா? பற்று- பித்தாக மாறுகிறது. துச் செல்லப்படும் T சிறைச்சாலைக்குள்ளே தூக்குமேடைக்கு அழைத் கைதியின் நிலைமையைப் பார்ப் போம். உயிர் மீது பற்றில்லாமலா இருப்பான் அவன். மரணத்தை நோக்கி அவன் அடியெடுத்து வைக்கும் போது - வைகறையின் இளங் காற்று அவனுக்கு இன்ப மூட்டு மென்றா நினைக்க முடியும். பித்துகொண்டு அந்தக் கைதிகள் குதிப்பார்களாம் - பாடுவார்களாம் - அலறுவார் களாம் இங்கே பித்து, வியாதியின் அடிப்படையிலே ஏற்படு வதல்ல. பற்றின் அடிபீடத்திலிருந்து கிளம்புகிறது. · லையின் மரணப்படுக்கை காணும் மாதா உயிர் தரப்போகும் கைதி - பற்று கொண்ட பொருள்கள் பறிக்கப்படுகிறதே யென்கிறபோது பித்துக் கொண்டவர் களாகி விடுகிறார்கள். தாய்க்கு குழந்தையைவிட கைதிக்கு உயிரைவிட -ஒரு சமுதாயத்துக்கு மொழி மிகவும் உயர்ந்தது. அந்த மொழிமீது பற்று வைக்காத வர் யாரே உளர்! அந்தப் பற்று அறுக்கப்படும்போது பற்றுகொண்டோர் பித்தர்களாக மாறுவதிலே என்ன •