உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அடுத்த நாள்: ஆறுமாதக் கடுங்காவல் 19 மணப்பாறையிலே கூட்டம். அதற்காகப் புறப் பட்டுக் கொண்டிருந்தோம். அப்போது மாவட்டத்தின் செயலாளர் அம்பில் தர்மலிங்கம் வந்து வந்து சேர்ந்தார். அம்பில் என்பது திருச்சி மாவட்டத்திலே உள்ள ஒரு சிற்றூர். மைலூர் பஞ்சாயத்து. அங்கே ஒரு உயர்நிலைப் பள்ளியும் உண்டு. அம்பில் என்று சொன்னால் நமது இயக்கத்தினருக்கு அந்த ஊரின் பெயர் ஞாபகம் வராது. தர்மலிங்கத்தின் பெயர்தான் எதிர்வந்து நிற்கும். அம் பில் வந்தார் - போனார் - என்றே எல்லோரும் பேசுவார் கள். வந்தார் - போனார் - என்கிறேனே; அதிலேகூட அர்த்தம் இருக்கிறது. ஒரு இடத்தில் சில மணி நேரங் கள் அவர் இருப்பது கஷ்டமான காரியம். அவ்வளவு வேலை அவருக்கு. வந்தார் - போனார் என்றே எல் லோரும் பேசுவர். நான் அவரைத் தேடிக்கொண்டிருப் பேன்; என்னிடத்தில் வந்தே அவரைக் கண்டீர்களா எனக் கேட்பார்கள். இயக்கக் காரியங்கள் மட்டுமல்ல ; மற்றவர்களுக்கும் நலம் பயக்கும் ஒத்தாசைகள் புரிய வேண்டுமென்பதிலும் அதற்காக அலைவதிலும் முயற்சி எடுப்பதிலும் அலாதியான சுவை அவருக்கு! யாராவது தேர்தலிலே ஜெயிக்க வேண்டுமா? அங்கே அம்பில் இருப்பார் - ஊதியமில்லாமல், கொள்கைக்கு முரண் ஏற்படாமல்! யாரையும் எளிதில் நம்பி விடுவார்- அதன் காரணமாக நம்பிக்கை மோசத்திற்கு ஆளாகி பிறகு தன்னையே நொந்துகொள்கிற காட்சி நமக்கே பரிதாபமாயிருக்கும். லால்குடி மாநாட்டிலே ஏறத்தாழ ஏழாயிரம் ரூபாய் மிச்சப்படுத்தி - அந்த மாநாடு ஒரு எழுச்சி ஏடு - என்ற மதிப்புரையை மாவட்டத்திற்குத் தந்த பெருமை தோழர் அம்பிலை தலைவராகப் பெற்ற