உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

50 கருணாநிதி குமே! பத்திரிகைகளில் அவர் படம் வெளிவருகிற அள வுக்குக்கூட ‘சுயராஜ்யம்' அவருக்கு பெருமை தரவில்லை. அப்படிப் புகழ் வராததற்கு ஒரு முக்கிய காரணமும் இருக் கிறது. அவர் ஒரு திராவிடர். அவர் மார்பிலே பூணூலும், மன திலே ஆரியமும் இருந்திருந்தால் - தென்னாட்டு விநோ பாபாவே ஆகியிருப்பார். அடிமை மண்ணின் தெருக்களிலே கத்திக் கத்தி, ஊர்களைச் சுற்றிச் சுற்றி வந்த அந்த பரிதாபத்திற்குரிய ஜீவன் என்ன ஆயிற்றோ தெரியவில்லை. ஆனாலும் அவர் செய்து காட்டிய தொண்டு என் மனதை விட்டு நீங்க வில்லை. கொள்கை பேதமிருக்கட்டும் ஒருபுறம்; கொண்ட கொள்கையில் அவருக்கிருந்த வெறியை என்னால் மறந் திடவே முடியாது. தலையிலே ஒரு காந்திக் குல்லாய் - ஒரு வெள்ளை சட்டை - பழுப்புப் பூக்களை ஓரத்திலே பெற்றி ருக்கும் ஒரு சால்வை - கையிலே மூன்று நிறக் கொடி. - மறக்கமுடியாத அந்த அவர் - உழைக்கும் தோழர் களுக்கு ஒரு வழிகாட்டி. எந்த இயக்கத்திலுமுள்ள தொண் டர்கள் தோழர்கள் - அவர் போன்ற கடமை யுணர்ச்சி பெறவேண்டும். கையிலே கொடி தூக்கி தன்னந்தனியாகச் சென்று ஊர் ஊருக்கும் பிரச்சாரம் செய்வது ஒன்றுதான் சிறந்தது என நான் குறிப்பிடவில்லை. முறை அதுவாக இல்லாவிட்டாலும் - உள்ளம் அவர் போன்றதாய் அமையவேண்டும் - உழைத்திடும் உத்தமர் களுக்கு! பயன் கருதி அத்தகு பணியில் இறங்கக்கூ கககூடாது. பிற்காலத்தில் பெருமையும் புகழும் வருமென்றா அவர்