உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 69 வடநாட்டு முதலாளியால்! சிமண்டு செய்வதற்கான மூலப் பொருளை எடுப்பதற்காக தாறுமாறாகப் பிளந்தெறியப் பட்டுள்ள கல்லக்குடி கிராமம் திராவிடர் உள்ளத்தையும் பிளந்திடத்தான் செய்கிறது தன் நிலையைக் காட்டி! மண்ணையும் மூலப் பொருள்களையும் தொழிற் சாலைக்கு அள்ளிக்கொண்டு செல்வதற்காக தண்ட வாளம் போட்ட வண்டிகள் ஓடிக்கொண்டி ருக்கின்றன. அந்த வண்டிகளுக்கு ஓய்வே இல்லை. அந்த கிராமத் தின் நடுவிலே -இருதயத்தைக் கீறிடும் விதத்திலே - இருப்புப்பாதை அமைத்து - அதிலே சிமண்டு யும் பொருள்களை - ஏற்றிச் செல்கிறார்கள் திராவிடத் தொழிலாளிகள் வடநாட்டு முதலாளி முதலாளி கொழுப்பதற் காக! - செய் கிணறு போலப் பல டங்கள் தோண்டப்பட கிணறு சுண் டிருக்கின்றன. ஆழமான குளம்போல பல இடங்களில் பெருங் குழிகள் காணப்படுகின்றன. அந்தக் களிலும் - பெருங் குழிகளிலும் - பாளம் பாளமாக ணாம்புக் கற்கள் பலகை போல அமைந்திருக்கின்றன. புத்தகம் அடுக்கப்பட்டிருப்பது போல காண ப்ப படும். அந்த மூலப்பொருளை செந்தமிழ்த் தாயிடமிருந்து வட நாட்டான் அபகரித்துப் பெரியதோர் ஆலையை வான ளாவக் கட்டியிருக்கிறான். அந்த ஆலையின் புகைக்கூண் டிலிருந்து கிளம்புகிற புகை மேகம்போல விண்ணில் பரவி கனத்தின் காரணமாக காற்றோடு கலக்க முடி யாமல் சிறிது தூரத்தில் உள்ள ஏழை விவசாயி களின் வயல்களிலே இறங்கிப் படிந்து அவர்களுடைய பயிர் வளத்தையும் நாசமாக்குகிறதாம்.